Breaking News

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மற்றும் லால்பேட்டை சுகாதார மையம் இணைந்து நடத்திய இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்!!

நிர்வாகி
0

  !

லால்பேட்டை சுகாதார மைய வளாகத்தில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில்  பெரம்பலூர்  தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் லால்பேட்டை சுகாதார மையம் இணைந்து நடத்திய இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் 23-7-2022  அன்று சிறப்புற நடைபெற்றது.

இதில் Dr. செல்வராஜ் (Urology Specialist) , Dr. பிரகாஷ் (Cardiologist) உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச ஆலோசனைகள் & மருத்துவம், ECG, ECHO போன்ற கருவிகளுடன் மருத்துவமும், மருந்துகளும் இலவசமாக வழங்கி மக்களுக்கு பயன்பெறும் வகையில் நடைபெற்றது. 

இதில் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து 450 க்கும்  அதிகமான பயனாளிகள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர், மேல்சிகிச்சைக்காக 37 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

இதில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி சிறப்பு  மருத்துவர்கள், லால்பேட்டை சுகாதார மையம் மருத்துவர்கள் ,ஊழியர்கள் மற்றும்  இந்த ஏற்பாட்டை சிறப்பாக முன்னின்று நடத்திய *கத்தார் லால்பேட்டை ஜமாத்* நிர்வாகிகள், ஆலோசனை குழு உறுப்பினர்கள் , அனைத்து வெளிநாடு வாழ் லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் , ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்















.

Tags: லால்பேட்டை

Share this