லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நம் நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.
நிர்வாகி
0
இந்திய திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 15/8/2022 திங்கள் கிழமை சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தலைமை வகித்தார்.
கடலூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் எம்.ஜெ.மசூது அஹமது, மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம்.முஹம்மது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி அனைவரையும் வரவேற்றார். நகர இளைஞரணி துணை தலைவர் மவ்லவி முஹமம்து தவ்பீக் மன்பஈ கிராத் ஓதினார்.
நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நகர துணை தலைவர் மவ்லவி எம்.முஹமம்து அய்யூப் மன்பஈ சுதந்திர தின உரையாற்றினார்.
நகர பொருளாளர் எம்.ஹெச்.முஹிப்புல்லா நன்றி கூறினார்.
நகர துணை மவ்லவி ஏ.அமீனுல் ஹுசைன் மன்பஈ துஆ ஓதினார்.
நிகழ்ச்சியில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லானா ஹாபிழ் நூருல்லா ஹழ்ரத், நகர கவுரவ ஆலோசகரும் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியுமான வி.ஏ.அப்துர் ரஹ்மான், துணை தலைவர்கள் எஸ்.எம்.முஹம்மது ஹாமிது, கே.எஸ்.சபியுல்லா, துணை செயலாளர் எம்.எஸ்.முஹமம்து சித்தீக், மாநில மாணவரணி பொருளாளர் ஏ.எஸ்.அஹமது, மாவட்ட மாணவரணி தலைவர் ஏ.கே.முஹம்மது அஸ்கர், நகர இளைஞரணி செயலாளர் எம்.ஏ.ஹிதாயத்துல்லா, பொருளாளர் ஏ.ஆர்.சிராஜுதீன், மவ்லவி இஸ்மத்துல்லா, ஹஜ்ஜி முஹமம்து,அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் மவ்லவி முஹமம்து அப்பாஸ் மிஸ்பாஹி, வி.ஏ.ஹாஜி அஹமது, கிஃபாயத்துல்லா, புருணை தொழில் அதிபர் ஏ.ஆர்.ஜியாவுதீன், முஹமம்து யாசிர், ஜாகீர் ஸ்டோர் ஹஜ்ஜி முஹம்மது, தொழிலாளர் அணி முஹமம்து ஹசன், மாணவரணி நிர்வாகிகள் முஸாஹிர், முஹமம்து இஸ்மாயில், நிஜாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை