லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் கொண்டாதப்பட்ட 75வது சுதந்திர தினம்..!
நிர்வாகி
0
இன்று (15-08-2022) நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் லால்பேட்டை முதல்நிலை பேரூராட்சியில் மாணவர்கள், ஜமாஅத்தார்கள், அதிகாரிகள்,கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் மு.பாத்திமா முஹம்மது ஹாரிஸ் அவர்களால் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. தமிழ் கீதம், தேசிய கீதம் உள்ளடக்கிய பாடல்களுவுடன் "தூய்மையான நகரத்தை உருவாக்குவோம்" என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் அவர்களும், லால்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் லால்பேட்டை பெருநகர தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை முழுவதும் சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை