இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு.
நிர்வாகி
0
இன்று 20/08/2022 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சமுதாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. வருகிற 2023 மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பவள விழா நிகழ்ச்சிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவ்விழாவில் சமயநல்லிணக்க விருதுகளை பல்சமயப் பெருமக்கள் பலருக்கும் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
சந்திப்பில் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ் கனி MP, மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags: செய்திகள்