Breaking News

வக்பு பணியாளர்களை வாரியமே தேர்வு செய்ய வேண்டும்! மஜக மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

நிர்வாகி
0

 


ஆகஸ்ட் 21,


இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் வானதி ராஜபுரத்திற்கு வருகை தந்தார்.


அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தப்போது  பேசியதாவது...


வக்பு வாரிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியை இதுவரை வக்பு வாரியமே செய்து வந்தது. 


தற்போது இதை தமிழக அரசே நேரடியாக தேர்வு செய்யும் என்கிறார்கள். 


கேரளாவில் இப்படி ஒரு முடிவை அந்த அரசு எடுத்தப் போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மீண்டும் வக்பு வாரியத்திடமே அதை ஒப்படைத்தார்கள்.


எனவே தமிழக அரசு இப்பணியை மீண்டும் தமிழக வக்பு வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும் என மஜக வின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி, எதிர்வரும் செப்டம்பர் 10 அன்று சென்னையில்  தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும்  போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். 


இதில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன், பிரபல ஆளுமைகளும் பங்கேற்பார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


பிறகு பத்திரிக்கையாளர்கள் தமிழக ஆளுனரின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். 


அதற்கு பதிலளித்தவர், கவர்னரின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.


முதல்வர்களின் அதிகாரத்தை குறைத்து, ஆளுநர்களின் அதிகாரத்தை கூட்டிட ஒன்றிய அரசு முயல்வதாகவும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.


Tags: செய்திகள்

Share this