சிதம்பரத்தில் மீலாது நபி முன்னிட்டு நோயாளிகள், முதியோர்களுக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது.
சிதம்பரம் நகர முஸ்லிம். மக்கள் சார்பில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்ததினமான மீலாதுந் நபியை முன்னிட்டு சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது.
நேற்றும், இன்றும் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்திலும், சி.சி. டபிள்யு.ஈ ஆனந்தம் மாற்றுத் திறனாளிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் பிரட், பழங்களும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொருப்பாளர் மெளலவி. ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,
நவாப் பள்ளி முத்தவல்லி ஜாக்கிர் உசேன், தர்காக்கள் ஜமாத் மௌலவி காஜா மொய்னுத்தீன் ஹஸன், பள்ளி இமாம் மௌலவி ஹஜ் முஹம்மது ரப்பானி, முபாரக் அலி, தாஜுத்தீன் அஹமது, முஹம்மது அலி கான், முஜம்மில் உசேன், முதஸ்ஸிர் உசேன், நயாஸ் அஹமது, சோனாபாபு , முஹம்மது உசேன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஃபைசல் மஹால் முஹம்மது யாசின், மெட்ரோ. இக்பால், மிலன் நஜீர் அஹமது, லால்பேட்டை ஏ.எஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜவ்ஹர் மஹபூப் உசேன், மெளலவி இஸ்மாயில் நாஜி செய்தனர்.
Tags: செய்திகள்