Breaking News

மர்ஹபா சமூக நலப்பேரவையின் புதிய கட்டமைப்புடன் நிர்வாக குழு கூட்டம்..!

நிர்வாகி
0

 



சேவை ஒன்றை மட்டுமே தலையாய நோக்கமாக கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளை செய்துவருவது மர்ஹபா சமூக நலப்பேரவை…..


ஏழை எளியோர்களின் துயர் துடைக்கும் பணிகளை எப்பொழும் புத்துணர்ச்ச்சியோடும், உள்ளார்ந்த பூரீப்போடும் செயலாற்ற வேண்டுமென்ற பேராவல் …


இறைவன் அதை பலமாக உறுதிபடுத்துவானாக ..! ஆமீன்.


அதன் செயல் திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக, கடந்த 20.11.2022 அன்று நடைபெற்ற நிர்வாக குழுவின் தீர்மாணத்தின்படி, நிர்வாக குழுவை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய நிர்வாகிகள் அடங்கிய நிர்வாக குழு கூட்டம் அல்லாஹ்வின் அளப்பெறிய கருணை கொண்டு, அபுதாபி ஸலாம் வீதி ஹாஜி,S.A.தைய்யூப் அலுவலகத்தில் 27.11.2022 இரவு 8 மணியளவில் நடைப்பெற்றது .! 


பேரவையின் கட்டமைப்பினை விவாக்கம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் சேவை, செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் M. ஷூஐப் அவர்கள் துவக்க உறையில் நிகழ்த்த, பேரவியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை

ஒருங்கிணைப்பாளர் S.A.ரஃபி அஹமது அவர்கள் விளக்கி கூறினார்.


பேரவையின் தீவிர ஆலோசனைக்கு, புதிய நிர்வாக குழு விரிவாக்கம் செய்யப்பட்டு, கட்டமைக்கப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்! 


விரிவாக்கம் செய்யப்பட்ட பதிய நிர்வாக குழுவில் மூண்று ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 18 நிர்வாகிகளுடன் 21 பேர் கொண்ட குழு புதிய நிர்வாக குழுவாக செயல்படும். 


பொருப்புகள் மற்றும் செயல்பாடுகள் பல்வேறு குழுவாக பிரிக்கபட்டு செயல்பட தீர்மானிக்கப்பட்டது !


புதிய நிர்வாக குழு மற்றும் பேரவையின் கமிட்டி உறுப்பினர்களின் பேராதரவுடன் பல்வேறு சமூகப் பணியாற்ற தீர்மாணங்கள் எடுக்கப்பட்டது.


வல்ல ரஹ்மான் இதற்கு துணை புரிவானாக!

உங்கள் அனைவரின் துஆவுடனும், நல்வாழ்த்துகளுடனும்….


என்றும் சேவை பணியின் களத்தில்….

மர்ஹபா சமூக நலப்பேரவை


குறிப்பு:

வரும் வியாழன் 01.12.2022 அன்று குருதி கொடையளிக்க (Blood Donation) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகிகளை அணுக வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்


விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய நிர்வாக குழு

ஒருங்கிணைப்பாளர்கள்:


1) M. ஷூஐபுதீன் - லால்பேட்டை

2) S.A. ரஃபி அஹமது - லால்பேட்டை

3) N. முஹம்மது சித்தீக் - லால்பேட்டை


நிர்வாகிகள்:


4) S.A. முஹம்மது தையூப் - லால்பேட்டை

5) A.H. நஜீர் அஹமது - லால்பேட்டை

6) M. தாஜூதீன் - லால்பேட்டை

7) F. முஹம்மது ஃபைசல் - கோயம்புத்தூர்

8) P.Y. ஜாபர் அலி - லால்பேட்டை


புதிய நிர்வாகிகள்:


9) F. ஹாஜா ஃபக்ருதீன் - பரங்கிப் பேட்டை

10) H. முஹம்மது தாஹா - ரெட்டியூர்

11) A. லியாகத் அலி - அடியற்க மங்கலம்

12) M. தமிமுன் அனசாரி - அடியற்க மங்கலம்

13)A.R. ரியாஸ் அஹமது - ஆயங்குடி

14) T. முஹம்மது - திருமுல்லை வாசல்

15) J. அஷ்ரப் அலி ஜின்னா - லால்பேட்டை


16) N. பஹ்ருதீன் - மதுரை

17) N. முஹம்மது ஹிஸ்ஸாம் -   அய்யம்பேட்டை

18) T.M. ஜாகீர் ஹூஹைன் - லால்பேட்டை

19) A. B. நூருல் அமீன் - சிதம்பரம்

20) N. அர்ஷாத் அஹமது - லால்பேட்டை

21) P. H. ஃபத்தஹூல்லாஹ் - லால்பேட்டை

Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this