லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 74 ஆவது குடியரசு தின விழா..!
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முஹம்மது தையய்யூப் முஹிப்பி தலைமை வகித்தார்.
மௌலவி தவ்ஃபீக் மன்பஈ கிராத் ஓதினார்.
இந்திய முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரீஸ்,மாவட்ட துணைத் தலைவர் அனீசுர்ரஹ்மான்,நகர துணை தலைவர்கள் ஹாமிது,சபியுல்லா, பக்கிர் முஹம்மது, மெளலவி முஹம்மது அய்யூப், நகர துணைச் செயலாளர் முஹம்மது சித்தீக், மெளலவி முஹம்மது மன்பஈ, நகர இளைஞர் அணி செயலாளர் ஹிதாயத்துல்லாஹ்,எம்.ஹெச்.முஹம்மது நாஸர்,கல்வியாளர் ஹாஜி ஜாஃபர் அலி,அமீரக காயிதே மில்லத் பேரவை முஹிப்புர் ரஹ்மான்,முசாஹிர்,ராசிது, தஸ்லிம்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நகர துணைத் தலைவர் மெளலவி அமீனுல் ஹுசைன் மன்பஈ துஆ ஓதினார்.
Tags: லால்பேட்டை