Breaking News

சிதம்பரம் நகரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூட்டம்..!

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பவள விழா மாநாட்டிற்கு 3000 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கடலூர் தெற்கு மாவட்டத்தில் இருந்து பங்கேற்பதென சிதம்பரம் நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் முடிவு!



சிதம்பரம் லெப்பைத் தெரு சமுதாய நலக்கூடம் ARB மஹாலில் கடலூர் தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.


கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முஹம்மது ஜெகரிய்யா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்று பேசினார்.

பரங்கிபேட்டை நகர செயலாளர் மௌலவி ஷேக் ஆதம் மழாஹிரி கிராஅத் ஓதினார்.


மாநில பொதுக்குழு உறுப்பினரும் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஷபீயுல்லாஹ் மன்பஈ, முஸ்லிம் லீக் மூத்த முன்னோடி கௌரவ ஆலோசகர் கவிஞர் முஹிப்புல்லாஹ்,

மாவட்ட துணைத் தலைவர்கள் அன்சுர் ரஹ்மான்,காரியஸ்தர் அப்துர் ரஹ்மான், முஹம்மது இக்பால்,மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்லாஹ் MC,MSF மாநில பொருளாளர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரீஸ்,சிதம்பரம் நகர தலைவர் அன்வர் அலி,லால்பேட்டை நகரத் தலைவர் அப்துல் வாஜிது,ஆயங்குடி நகர தலைவர் ஷஹாபுதீன், மங்கலம்பேட்டை நூர் முஹம்மது, எள்ளேரி அலாவுதீன், மானியம் ஆடூர் முஹம்மது சுலைமான்,டி.நெடுஞ்சேரி முஹம்மது அலி,கொள்ளுமேடு முஹம்மது ஜுனைத், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முஸ்தபா, செயலாளர் சுஜாவுதீன், மாவட்ட MSF தலைவர் அஸ்கர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பேரார்வத்தோடு பங்கேற்று தத்தமது பகுதிகளில் இருந்து எந்தெந்த வாகனங்களில் எவ்வளவு பேர் பங்கேற்க உள்ளனர் என்பதை பதிவு செய்தனர். 


மண்டல பொறுப்பாளர்கள் ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி, வழக்கறிஞர் ஆர்.அபூபக்கர் ரஸ்வி ஆகியோர் பவள விழா அகில இந்திய மாநாடு வெற்றி பெற ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.


கடலூர் தெற்கு மாவட்டத்தில் இருந்து பவள விழா அகில இந்திய மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்து முன் மாதிரி மாவட்டமாக மிளிர பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


முன்னதாக சிதம்பரம் மேல வீதி சந்திப்பில் தாய்ச் சபையின் பச்சிளம் பிறைக் கொடியை மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி ஏற்றி வைத்தார்.

மாவட்ட பொருளாளர் ஹாஜி ஷஹாபுதீன் நன்றி கூறினார்.


கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நகர தலைவர் அன்வர் அலி, செயலாளர் மெளலவி ஷாஹுல் ஹமீது பாகவி, பொருளாளர் அப்துல் ரியாஸ், நகர துணைச் செயலாளர் சாகுல் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.


கூட்டத்தில் லால்பேட்டை நகர  செயலாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி, துணைத் தலைவர்கள் ஹாமீது,கே.ஏ.சபியுல்லாஹ்,மெளலவி அம்னுல் ஹுசைன்,முஹம்மது அய்யூப் மன்பஈ, நகர துணை செயலாளர் முஹம்மது சித்தீக்,

தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் இம்தியாஸ், மாவட்ட MSF செயலாளர் துராபுதீன், மாவட்ட தொழிலாளர் அணி ஆயங்குடி முஹம்மது அலி,

நகர இளைஞர் அணி செயலாளர் ஹிதாயத்துல்லாஹ்,பிரமுகர்கள் மௌலவி சயீது அஹமது மிஸ்பாஹி, மெளலவி ரஹமத்துல்லாஹ் ஜமாலி, ஜபருல்லாஹ், மெளலவி முஹம்மது மன்பஈ, நாஸர்,நகர MSF முசாஹிர், ஆஷிக் அலி, ராஷிது, நிஜாம்,சிதம்பரம் ஜவஹர், மெளலவி ஹஜ் முஹம்மது ரப்பானி, இப்ராஹிம், முஹம்மது மூசா

மங்கலம்பேட்டை சேட்டு ஹபீபுர் ரஹ்மான்,சலாவுதீன்,சபியுல்லாஹ், அஸ்ரார், முஹம்மது காசிம், கலீமுல்லாஹ், அப்துல் கனி, மௌலவி ஹபீப் முஹம்மது மிஸ்பாஹி, சைபுல்லாஹ், மன்சூர் அலி, முஹம்மது சயீது, மஃரூப், சைபுல்லாஹ்,ஆயங்குடி நகர பொருளாளர் அப்துஸ் ஸமத்,மானியம் ஆடூர் அப்துல் வதூத், அபுசாலி, அனஸ், ஹிதாயத்துல்லாஹ்,டி.நெடுஞ்சேரி முஹம்மது அலி, ஷஹாபுதீன், இஸ்மத்துல்லாஹ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


தீர்மானம் 1

மதவெறி மாயட்டும் மனிதநேயம் வளரட்டும் என்கிற உன்னத லட்சியத்துடன் ஈரோடு பிளாட்டினம் அரங்கில் ஜனவரி 15 16 தேதிகளில் மாநில ஜமாத் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட தேச ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்ட அவையோர், பார்வையாளர்கள் மாநாட்டை நடத்திய ஜமாத் உலமா சபையினருக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் 2 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டிற்கு அதிக அளவில் வரவேற்பு குழுவில் சேர்ப்பது என்றும், மாவட்டம் முழுவதும் சுமார் 500 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வது என்றும், அனைத்து மஹல்லா நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பது என்றும், ஒவ்வொரு ஜும்ஆ தொழுகையின் போதும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மாநாடு சம்பந்தமாக அறிவிப்பு செய்வது என்றும், மாநில பேச்சாளர்களை அழைத்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என்றும், மாநாட்டிற்கு கடலூர் தெற்கு மாவட்டத்தில் இருந்து மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.


தீர்மானம் 3


சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அபுல்கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை நிறுத்திய ஒன்றிய அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது மேற்படி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 4

பூரண மதுவிலக்கை படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்திட மத்திய மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 5 


நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விசாரணை கைதிகள் நீண்ட காலமாக வழக்கு விசாரணை இல்லாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலானவர்கள்அப்பாவி முஸ்லிம்களாக இருக்கிறார்கள் இது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இத்தகைய அப்பாவி முஸ்லிம் கைதிகளை ஒன்றிய மாநில அரசுகள் விடுவித்து மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.







Tags: செய்திகள்

Share this