லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 79 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 160 - ஆம் ஆண்டு விழாவும், 79 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும் இன்ஷா அல்லாஹ் 2023 மார்ச் 05 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இவ்விழாவில் மார்க்கக் கல்வியை கற்றறிந்த ஆலிம்களுக்கும், குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்களுக்கும் பட்டம் வழங்கி, மார்க்க அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர். 2023 மார்ச் 04 சனிக்கிழமை மாலை பெண்களுக்கான பயாண் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றது.
நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெறவும், பட்டம் பெறும் ஆலிம்கள் - ஹாபிள்கள் ஆகியோரின் பணிகள் சிறந்திடவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்தித்து, இவ்விழாவினில் அனைவரும் பங்கேற்று பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Tags: லால்பேட்டை