Breaking News

ஹஜ் பயணத்திற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு..!

நிர்வாகி
0


---

இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கின்றது.


ஹஜ் யாத்திரைக்கான பணிகள் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் ஏற்படும் அசவுகரிகங்கள் குறித்து விவரித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.டி. முஹம்மது பஷீர் எம்பி, அப்துல் சமது சதானி எம் பி, கே நவாஸ் கனி எம்பி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி வி அப்துல் வஹாப் எம்பி ஆகியோர் இணைந்து சந்தித்து பணிகளை விரைந்து துவங்க வலியுறுத்தினர்.


இந்த ஆண்டிற்கான ஹஜ் கொள்கை ஒன்றிய சிறுபான்மை நலத்துறையினால் இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.


மேலும் நடப்பாண்டிற்கான ஹஜ் பயணிகளுக்கான விண்ணப்பங்கள் கூட இன்னும் வெளியிடப்படாமல் தாமதமாகி இருக்கிறது.


இது ஹஜ் யாத்திரிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.


எனவே ஒன்றிய வெளியுறவுத்துறை இன்னும் காலம் தாமதிக்காமல் விரைந்து ஹஜ் பயணத்திற்கான பணிகளை மேற்கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்களிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this