தஞ்சை மஜக பிரதிநிதிகள் சங்கமம் நிகழ்ச்சி லால்பேட்டையில் ஆலோசனை கூட்டம்..!
பிப்.25.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று "மஜக பிரதிநிதிகள் சங்கமம்" நிகழ்வு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வு குறித்து கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகர ஆலோசனைக்கூட்டம் நகர செயலாளர் M.Y யூனுஸ் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் OR. ஜாகிர் உசேன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தஞ்சையில் நடைபெற உள்ள "மஜக பிரதிநிதிகள் சங்கமம்" நிகழ்வில் மாவட்டம் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைத்து மட்ட நிர்வாகிகளும் பங்கேற்பது குறித்தான ஆலோசனைகள் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது, மாணவர் இந்தியா மண்டல செயலாளர் முஸ்ரப், நகர பொருளாளர் நூர், நகர துணை செயலாளர் சாதுல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை