முஸ்லிம் லீக் பவள விழா: ஜனநாயகத்தின் அடையாளம்! பேராசிரியர். ஜவாஹிருல்லா வாழ்த்து..!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும்அறிக்கை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா ஆண்டைசிறப்பிக்கும் வகையில், ‘அகில இந்திய மாநாடு 2023’, சென்னையில் நடைபெறுகிறதுஎன்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
1906-ல் ‘இந்திய முஸ்லிம் லீக்’ உருவாக்கப்பட்டு அதன்மூலம் நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தது முஸ்லிம் லீக், வெறும் சுதந்திரப்போராட்டத்தை மட்டும் முன்னெடுக்காமல் முஸ்லிம்களின் அரசியல்பிரதிநிதித்துவத்தையும், பிற மதத்தவரிடையே சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்தது.
நாடு விடுதலைப் பெற்ற பிறகு நாடு பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றுஇந்திய முஸ்லிம்கள் மீது அபாண்டமான முறையில் பழிசுமத்தப்பட்டு இந்திய முஸ்லிம்கள்குற்றவாளிகளைப் போன்று சித்தரிக்கப்பட்ட நிலையிலும், இந்திய முஸ்லிம்களுக்காகமட்டுமின்றி ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும்போராடிய இயக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றால் அது மிகையாகாது.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் தலைமையில் செயல்பட்ட இந்தக்கட்சி, கேரள மாநிலத்தில் ஆட்சிக்கட்டிலில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்தது. தமிழ்நாட்டிலும் 1967ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம் லீக் பெரிதும் துணையாகஇருந்துள்ளது. வரலாற்று ரீதியாகச் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைஅரசியல், கல்வி, சமூக ரீதியாக மேம்படுத்தியதில் முஸ்லிம் லீக்கின் பங்கு அளப்பரியது.
இதுபோன்ற நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ள முஸ்லிம் லீக் அதன்பவளவிழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. முஸ்லிம் லீக்கின் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனதுநெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
Tags: செய்திகள்