லால்பேட்டை நகர திமுக நடத்திய இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி
லால்பேட்டை நகர திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி APM மஹாலில் நகர செயலாளர் அன்வர் சதாத் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, தஃப்ஸீர் ஷாராவீ மொழிபெயர்ப்பாளர் மெளலவி முஹம்மது அன்சாரி மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு காஜியும், ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வருமான மெளலவி நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத்,IUML நகரத் தலைவர் அப்துல் வாஜிது .செயலாளர் தையூப் முஹிப்பி..பொருளாளர் முஹிபுல்லா . பேரூராட்சி மன்ற தலைவர் பாத்திமா முஹம்மது ஹாரிஸ், முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் அமானுல்லாஹ், பொருளாளர் அப்துல் அஹது மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை