ஒன்றிய அரசை கண்டித்து லால்பேட்டையில் மின்னஞ்சல் போராட்டம்..!
ஒன்றிய பா.ஜ.க. அரசு பாடநூல்களில் தலைசிறந்த சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் தலைவர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களின் பங்களிப்பை நீக்கியதோடு, தேசபிதா மகாத்மா காந்திஜியை கொன்ற நாதுராம் கோச்சே, பாசிச ஆர்.எஸ்.எஸ். குறித்த செய்திகளை நீக்கி உண்மை வரலாற்றை திருத்தும் நடவடிக்கை கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் நாடு தழுவிய மின்னஞ்சல் அனுப்பும் அறப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று 20/04/2023 வியாழன் மாலை லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
மண்டல பொறுப்பாளர் ஏ .எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாவட்டத் துணைத் தலைவர் அனிசுர் ரஹ்மான், மாநில எம்.எஸ்.எஃப் பொருளாளர் அஹமது, தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் முபாரக், லால்பேட்டை நகர தலைவர் அப்துல் வாஜிது,நகர செயலாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி, பொருளாளர் முஹிப்புல்லாஹ், நகர துணைத் தலைவர் மெளலவி அமீனுல் ஹுசைன், துணைச் செயலாளர் முஹம்மது சித்தீக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே. முஹம்மது அஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை நகர தலைவர் முசாஹிர், ஆஷிக் அலி, அஹமதுல்லாஹ்,தஸ்லிம் உள்ளிட்ட எம்.எஸ்.ஃப் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
Tags: லால்பேட்டை