Breaking News

மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி!

நிர்வாகி
0



ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றும் நின்று நிலவட்டுமாக! ஆமீன்!


வல்ல ரஹ்மானின் நற்கிருபையினைக் கொண்டு, இன்று 04.04.2023 செவ்வாய் மாலை - புதன் இரவு ஹம்தான் ரோடு - மர்ஹபா பிளாட்டின் உள்அரங்கு ஹாலில் அமீரகப் பணியை நிறைவு செய்து விட்டு, தாயகம் செல்ல இருக்கும் மர்ஹபாவின் உயர்மட்ட குழுவின் நிர்வாகி ஹாஜி S.A. முஹம்மது தையூப் அவர்களுக்கு, பேரவையின் நிர்வாக குழு சார்பில் இஃப்தார் விருந்தும், பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடைபெற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!


இஃப்தார் விருந்து நிறைவேறி, மஹ்ரிப் தொழுகைக்குப் பின், நிர்வாக குழுவின் பிரிவு உபசார நிகழ்ச்சிகள் துவங்கியது.


துவக்கமாக ஹாபிழ் ஜாபர் அலி மனபஈ அவர்கள் இறைமறை வசனம் ஓத, பரங்கிப்பேட்டை முஹம்மது பைசல் அவர்கள் ரமலான் மற்றும் பொதுச்சேவையின் சிறப்பு பற்றி துவக்க உரையாற்ற, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் S.A. ரபி அஹமது அவர்கள் வரவேற்புரையாற்ற, வாழ்த்துரைகளை ஒருங்கிணைப்பாளர் N. முஹம்மது சித்தீக் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகி A.H. நஜீர் அஹமது வழங்க, இப் பேரவை கடந்து வந்த பாதையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாக்கள், சமுதாய ஆளுகைகளுடன் நிகழ்ச்சிகள், பல்வேறு சந்திப்புகள், ஒன்று கூடல் நிகழ்வுகள், குருதிக் கொடை மற்றும் உதவிகளில் தையுப் அவர்களின் அயராத பங்களிப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் M. ஷூஐப் அவர்கள் தமது தொகுப்புரையில் எடுத்து கூறினார்.


இறுதியாக, ஏற்புரையினை தையூப் அவர்கள் கூற, நன்றி உரையினை சகோதரர் K.A. ரபீக் நாசர் கூற, மெளலவி ஹலிமத்துல்லாஹ் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


இந்நிகழ்வில் சகோதரர் S.A. முஹம்மது தையூப் அவர்களுக்கு பேரவையின் உயர் மட்ட குழு மற்றும் நிர்வாக குழு சார்பில் லால்பேட்டை M. தாஜூதீன், A.H. நஜீர் அஹமது, P. Y. ஜாபர் அலி, P.H. ஃபத்தஹூல்லாஹ் மற்றும் மதுரை ஃபக்ருதீன், ரெட்டியூர் முஹம்மது தாஹா, பரங்கிப்பேட்டை முஹம்மது ஹாஜா அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.


பேரவையின் சார்பில் பிரிவு உபசார நினைவு சின்னத்தை ஒருங்கிணைப்பாளர்கள் M. ஷூஐப், S.A. ரபி அஹமது, N. முஹம்மது சித்தீக் மற்றும் ஆயங்குடி ரியாஸ் அஹமது, பரங்கிப்பேட்டை பைசல், சிதம்பரம் அமீன், அய்யம்பேட்டை முஹம்மது ஹிஸாம் வழங்கி கெளரவித்தார்கள்.


சிறப்பு நினைவு பரிசினை மதுரை ஃபக்ருதீன் மற்றும் அலி & சன்ஸ் நெட் ஒர்க் Eng. ஃபிரோஸ் அலி அவர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.


பிரியா விடை பெறும் ஹாஜி தைய்யூப் அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களையும், நலன்களையும், சரீர சுகத்தையும் பெற்று, சிறப்பான எதிர்கால வாழ்வை பெற்றிட பேரவை வாழ்த்தி, துஆ செய்தது.


சீறிய சிந்தனைகளும்…செயல்பாடுகளும் தொடரும்…


என்றும் மனித நேய சேவையில் மக்களுடன்…

மர்ஹபா சமூக நலப் பேரவை







Tags: உலக செய்திகள்

Share this