லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளத்திற்க்கு சேவை விருது வழங்கிய லால்பேட்டை துபாய் ஜமாத்..!
லால்பேட்டை துபாய் ஜமாஅத் சார்பில் நமது லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் இணையதளத்திற்கு "சேக் மக்தூம் பின் ராசித் அல் அல் மக்தூம் விருது" வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டு காலங்களாக மின்னணு ஊடக உலகில் தடம் பதித்து வரும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் இணையதளம், உள்ளூர் செய்திகளை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு இணையதளங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
உலகெங்கும் வாழும் லால்பேட்டை மக்களுக்கு ஓர் உறவுப் பாலமாக லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் இணையதளம் திகழ்ந்து வருகிறது.
சமூக வலைத்தளங்கள் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ள இந்த தருணத்தில், லால்பேட்டை எக்ஸ்பிரஸ். காம் இணையதளம் தொடர்ந்து முன்னணியில் இருப்பதற்கு லால்பேட்டை மக்கள் வழங்கி வரும் தொடர் ஆதரவே காரணமாக அமைந்துள்ளது.
இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கிய லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் இணையதளத்தின் வாசகர்கள், பங்களிப்பு செய்யும் எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நலன் விரும்பிகள், லால்பேட்டை மக்கள், வெளிநாடு வாழ் லால்பேட்டை ஜமாஅத்துகள் மற்றும் அமைப்புகள் அணைவருக்கும் "சேக் மக்தூம் பின் ராசித் அல் அல் மக்தூம் விருதை லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் இணையதளம் காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கிறது.
இந்த சேவை விருது வழங்கிய லால்பேட்டை துபாய் ஜமாத்துக்கு நன்றி..!
Tags: லால்பேட்டை