லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதயங்களை இணைக்கும் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இதயங்களை இணைக்கும் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தலைமை வகித்தார்.
மாணவர் அணி துணைச் செயலாளர் அமீர் கிராஅத் ஓதினார்.
நகரத் தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது வரவேற்புரையாற்றினார்.
தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ் அறிமுக உரையாற்றினார்.
நகர துணைத் தலைவர்
மெளலவி எம். முஹம்மது அய்யூப் மன்பஈ துவக்கவுரையாற்றினார்.
கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர்
ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஜகரிய்யா, சவூதி காயிதேமில்லத் பேரவை தலைவர் எஸ்.எம்.முஹம்மது நாஸர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருக்குர்ஆன் விளக்கவுரை மொழிபெயர்ப்பாள
மெளலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ,
இந்திய புனித திருச்சபை பேராயம் பிரதம பேராயர் டாக்டர் ஏ.அருள் பிரகாசம்,
தமிழ்நாடு பிராமணர்கள் சங்க துணைச் செயலாளர் எஸ்.என்.தோத்தாத்திரி ஆகியோர் சமய நல்லிணக்க உரையாற்றினர்.
நகர பொருளாளர் எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ் நன்றி கூறினார்.
இளைஞர் அணித் தலைவர் மெளலவி முஹம்மது ஹாமீம் பைஜி துஆ ஓதினார்.
நகர செயலாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜெ.அப்துல் ஹமீது பொருளாளர் எஸ்.ஏ.அப்துல் அஹது, லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ், துணைத் தலைவர் அன்வர் சதாத், உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அஹமது, குத்ரத்துல்லாஹ், உள்ளிட்ட முஸ்லிம் பட்டதாரிகள் கல்வி சங்க நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் பொறுப்பாளர்கள், லால்பேட்டை, சிதம்பரம், கொள்ளுமேடு, கந்தகுமாரன், மானியம் ஆடூர் உள்ளிட்ட நகர பிரைமரி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை