Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 2022 - 2024 ஆண்டுக்கான 5வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது..!

நிர்வாகி
0


 லால்பேட்டை  துபாய் ஜமாத்தின் 2022 - 2024 ஆண்டுக்கான 5வது செயற்குழு கூட்டம் நேற்று 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில் டேரா போர்ட் செய்து ஏரியாவிலுள்ள பார்க் ஆஜம் ரெஸ்டாரண்டில் ஜமாத் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மௌலவி A.R ரியாஜூல்லாஹ் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.


 பொருளாலர் A.R ரபியுல் அஹ்மது தற்போதைய வரவுசெலவு கணக்குகளை சமர்பித்தார்,ஜமாஅத் நிர்வாக குழுவால் ஏற்கப்பட்டது.




 செயலாளர் Z. பயாஜ் அஹமத் இதுவரை ஜமாத் செய்த செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அதன்பின் இனி வரும்காலங்காளில் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது..


அதன்படி கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..!!


1) லால்பேட்டையை சார்ந்த கணவரை இழந்த பொருளாதாரம் நலிவடைந்த 5 பெண்களுக்கு வாழ்வாதார உதவித்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு வழங்குவது..


2) பாண்டிச்சேரி பீம்ஸ் மருத்துவனையுடன் இணைந்து லால்பேட்டை துபாய் ஜமாத் சார்பில் பெண் மருத்துவக்குழுவினரை கொண்டு பெண் மார்பக புற்றுநோய், கர்ப்பபை பிரச்சனைகளை கண்டறியும் முழுக்க முழுக்க பெண்களுக்கான மருத்துவ முகாம் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடத்துவது.  


3) சென்ற வருடம் போல் இவ்வருடமும் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் அரையாண்டு பள்ளி விடுமுறையில் பொருளாதார நலிவுற்ற சிறுவர்களுக்கு இலவச கத்னா முகாம் மூலம் சுன்னத் செய்ய முடிவெடுக்கப்பட்டது..


4)  வேலைத்தேடி அமீரகம் வரும் நமதூர் இளைஞர்களுக்கு வேலை தேடுவது.. இண்டர்வியூ எதிர்க்கொள்வது.. சம்பந்தமான வேலைவாய்ப்பு கருத்தரங்கம் ஜூலை மாதத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.


5) ஜமாத்தின் உதவிநாடி வரும் கல்வி உதவி,  மருத்துவ உதவி, பள்ளிவாசல் கட்டிடப்பணி உதவிகளை தேவைக்கேற்ப ஆய்வு செய்து வழங்குவது..


6) லால்பேட்டை துபாய் ஜமாத் 35 ஆண்டுக்கால சேவைகள் மற்றும் சமூகப்பணிகள் குறித்து மலர் தயார் செய்து வரும் வருடம் ஜமாத்  இஃப்தார்                                         பெருவிழாவில் வெளியிடுவது..


7) லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை துபாய் ஜமாத் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட ஜகாத் தொகை லால்பேட்டை ஹெல்த்கேர் செண்டருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட தொகை அடுத்த மாதம் இறுதியில் வழங்கி அதன் மூலம் ஜகாத் பெற தகுதியுடையவர்களுக்கு இன்சூரன்ஸ் முறையில் இலவச சிகிச்சை லால்பேட்டை ஹெல்த்கேர் மூலம் வழங்க உதவுவது..


8) லால்பேட்டை துபாய் ஜமாத்திற்கு வரும்காலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் குறைந்தபட்சம் கண்டிப்பாக 2 வருடம் சந்தா பூர்த்தி செய்தவர்களாக இருக்கவேண்டும் என்று நிர்வாகக்குழுவால் முடிவெடுக்கப்பட்டது. 




 


Tags: லால்பேட்டை

Share this