Breaking News

லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்ச்சி

நிர்வாகி
0

 


லால்பேட்டையிலிருந்து இவ்வாண்டு புனிதமிக்க ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் நடைபெற்றது.


27/05/2023 சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் மவ்லானா ஏ. நூருல் அமீன் ஹள்ரத் தலைமை வகித்தார்.


புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி ஏ.பி. ஜாகிர் ஹுசைன், லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜே. அப்துல் ஹமீத், புதுப்பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லி ஏ.எம். ஜாஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஃபிள் ஃபஜிலுல் ஹக் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். யூ. சல்மான் பாரிஸ் வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 


ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி துணை முதல்வர் மவ்லானா எஸ்.ஏ. சைஃபுல்லாஹ் ஹள்ரத் சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் ஜாமிஆவின் பேராசிரியர்கள் மவ்லானா ஏ. முனவ்வர் ஹுசைன், மவ்லானா காரி ஆர். இஜட். முஹம்மது அஹ்மத், மவ்லானா  ஏ. முஹம்மது காசிம், புதுப்பள்ளிவாசல் இமாம் மவ்லானா ஏ. ரிழ்வானுல்லாஹ், முஸ்லிம் ஜமாஅத் செயலாளர் கே.ஏ. அமானுல்லாஹ், புதுப்பள்ளிவாசல் முன்னாள் முத்தவல்லிகள் எம்.ஏ. முஹம்மது அலி, வி.ஜே, குத்புத்தீன் மற்றும் புனிதமிகு ஹாஜிகள், சங்கைமிகு ஆலிம்கள், அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள்,  ஜமாஅத்தார்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


மவ்லானா எஸ். முஹம்மது ஃபாரூக், ஓ.ஹெச். முஹம்மது மன்சூர், முஹம்மது யூசுஃப், முஹம்மது காசிம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.





Tags: லால்பேட்டை

Share this