Breaking News

லால்பேட்டை பேரூராட்சிக்கு கோரிக்கை மனு அளித்த SDPI கட்சி

நிர்வாகி
0

 லால்பேட்டை பேரூராட்சி க்கு கோரிக்கை மனு SDPI கட்சி லால்பேட்டை நகரம் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை

லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி கொல்லிமலை கீழ் பாதி ஆடூர் போகும் நேரு வீதி தார்சாலை மிகவும் பழுதடைடைந்து உள்ளது சரி செய்யவும் மற்றும் நாய்கள் அதிகமாக இருப்பதாலும் பிள்ளைகள் பள்ளிக்கு பள்ளிக்கூடம் போகும் போது நாய்கள் துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது பன்றிகள் அதிகமாக லால்பேட்டை பகுதிகளில் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் வீட்டிலோ அல்லது அவர்கள் பட்டியலிலோ கட்டுவதில்லை இதனால் இருசக்கரம் வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் காயம் அடைக்கிறார்கள் மேலும் லால்கான் தோப்பு தற்போது குப்பை கிடைங்காக மாறி வரும் அவலம் ஏற்படுகிறது அதை சுத்தம் செய்யவேண்டியும் இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு உண்டாக கூடும் என்பதாலும் இவை அனைத்தையும் சரி செய்யவேண்டும் அம்மனுவில் கூறி இருக்கிறது சம்மந்தப்பட்ட தலைவர் மற்றும் செயல் அலுவலர் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் SDPI லால்பேட்டை நகரம் சார்பாக நகர தலைவர் நஜீபுதின் அவர்கள் கோரிக்கை மனு அளிக்க பேரூராட்ச்சி சென்றபோது அலுவலகத்தில் எந்த சம்மந்தப்பட்ட அதிகாரி இல்லை என்பதாலும் பேரூராட்சி தலைவர் இல்லாதத்தாலும் அலுவலக பணியாளர் பாபு அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது





Tags: லால்பேட்டை

Share this