Breaking News

பொதுத்தேர்வில் சாதனை படைத்தமாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா...!!!

நிர்வாகி
0

  


லால்பேட்டை  ஜுன் 01-

        இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2. பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் வகிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஜித்தா டிராவல்ஸ் சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

         பள்ளிவளாகத்தில் நடந்தவிழாவில் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தலைவர் அஹமது தலைமை வகித்தார். பள்ளித்தாளாளர் குதரத்துல்லா மற்றும் ஜித்தா டிராவல்ஸ் ரயீஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

             பள்ளியின் துணைமுதல்வர் கிஸ்மத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.

               பள்ளிஅளவில் 10-ஆம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் வகிக்கும் முதல் மூன்று மாணவிகள் ஹரிணி.சு.(492/500), ஷீரின்பாத்திமா.நூ.(470/500), பைஹா.அ (469/500), மாணவர்கள் முஹம்மது ரிஜ்வான்.மு.(424/500), முஹம்மது ஹாஷித்.ஹ.(416/500) முஹம்மது அப்லல். அ.(410/500),மற்றும் பிளஸ்-2 மாணவி அமீரா மர்யம் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி ஜித்தாடிராவல்ஸ் நஜீர்அஹமது சிறப்புரை ஆற்றினார்.

           விழாவில் மௌலவி முஹம்மதுஆரிப், முஹம்மது, பேரூராட்சி உறுப்பினர்கள் ஜாக்கீர்,அப்துல் அஜீதுமாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.

பள்ளியின் முதல்வர் சுமதி நன்றி கூறினார்.

Tags: லால்பேட்டை

Share this