Breaking News

சென்னையிலிருந்து முதல் ஹஜ் விமானம் புறப்பட்டது..!

நிர்வாகி
0

 



தமிழ்நாடு ஹஜ்கமிட்டி சார்பில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின், முதல் குழு இன்று  சென்னையில் இருந்து, 2 தனி சிறப்பு விமானங்களில் 404  யாத்திரிகர்கள், ஜித்தா புறப்பட்டு சென்றார்கள். இவர்களை மாண்புமிகு  அமைச்சர். செஞ்சு மஸ்தான் அவர்கள் சென்னை விமான நிலையத்தில், வழியனுப்பி வைத்தார் உடன் சிறுபான்மையினர் நல ஆணையத்துணைதலைவர்.இறையன்பன் குத்தூஸ்


இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில்,புனித ஹஜ் யாத்திரையாக, சவுதி அரேபியாவில் மதினா மக்காவிற்கு செல்வார்கள்.


இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு, மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. அதோடு அவர்கள் குறைந்த விமான கட்டணத்தில், பயணிக்க தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.


இதைப்போல் சென்னையில் இருந்து, ஜித்தா செல்லும் சிறப்பு விமானங்களில், தமிழ்நாடு, புதுச்சேரி,  மாநிலங்களை சேர்ந்தவர்கள், பயணிக்க உள்ளனர். 


 இந்த சிறப்பு தனி விமானங்கள் இன்று  7 - 6 -  23 முதல், வரும் 21 ஆம் தேதி வரையில்  இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் சுமார் 4,169 யாத்திரிகர்கள்  ஹஜ்  பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர், சென்னையில் இருந்து ஜித்தா வழியாக, புனித ஸ்தலமான மக்கா மதினா செல்கின்றனர்.


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, காலை 11:20 மணிக்கு ஜித்தா  புறப்படுகிறது.அந்த விமானத்தில் 254   ஹஜ் யாத்திரிகர்கள் செல்கின்றனர். இதை அடுத்து இரண்டாவது விமானம் இன்று மதியம் 12:10 மணிக்கு சென்னையில்  இருந்து ஜித்தா புறப்படுகிறது. அதில் 150  யாத்திரிகர்கள் செல்கின்றனர்.


இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு வரும் ஜூலை முதல் வாரத்தில், இதை போல் தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர்.


ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள், மற்றும் அவர்களை வழி அனுப்பி வைக்க  குடும்பத்தினர், இன்று காலை 7 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். அவர்களை ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் பாஸ்போர்ட் ஆகியவர்களை சரி பார்த்து விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: சமுதாய செய்திகள்

Share this