லால்கான் பேட்டை எனும் லால்பேட்டை... நூல் அறிமுகம்...
நிர்வாகி
0
இன்று லால்பேட்டைக்கு வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அபுதாபி மர்ஹபா சமூக நலப் பேரவையின் பொருளாளர் நஜிர் அஹமது இல்லத்திற்கு மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி, பொருளாளர் மொளலா நாசர், துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் வருகை தந்தனர்.
தேநீர் விருந்துக்கு பிறகு நஜீர் அவர்கள் யாசர் அராபத் ஹசனி எழுதிய "லால்கான் எனும் லால்பேட்டை" என்ற நூலை மூவருக்கும் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகளும், மஜக வளைகுடா நிர்வாகிகளும், லால்பேட்டை நகர பொறுப்பாளர்களும் கலந்து பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை