Breaking News

அற்ப உயிரினங்களுக்கும் உறைவிடம் அளித்த இறைவன்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

நிர்வாகி
0

  நம்மை சுற்றி வலம் வரும் சிறு பிராணிகள் பல உள்ளன. அதனை வெறும் கையிலோ அல்லது காலிலே கூட நசுக்கி அழித்து விடலாம். ஆனால் அவைகளையெல்லாம் படைத்து நம்மை சுற்றி, சுற்றி வர ஏக இறைவன் அவைகளுக்கு எப்படி வாழ்வளித்து  அதற்கு உறைவிடமும் கொடுத்துள்ளான் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? ஆனால் உங்களால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியுமா என்று கேள்வியினை எழுப்பியுள்ளான் இறைவன்.

திருகுரான் (12.106) வசனத்தில் ஏக இறைவன் நம்மை சுற்றி வலம் வரும் பிராணிகள் இடையே வாழ்ந்து கொண்டுள்ளோம். அதன் அற்புதங்கள் உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்வியினை எழுப்பினான். அதன் உணவினை எடுப்பதற்கும் அதன் பின்பு ஓய்வெடுக்க அதன் உடல் அமைப்புகளை தெரிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவைகளை பின்னே காணலாமா!

சிலந்தி, தேனீ, எறும்பு போன்ற சிறு பிராணிகள் தான், ஆனால் அவைகள் எந்த பொறியியல் கல்லூரிகளில் படித்து தங்களது கூடுகளை காட்டுகின்றது என்று யோசித்தீர்களா!  சிலந்திகள் கட்டிடங்கள், மரம், செடி போன்றவற்றில் கூடு கட்டி ஊஞ்சல் ஆடுகிறன்றது என்று தான் நாம் நினைக்கின்றோம். ஆனால் அவைகள் எப்படி தன்னுடைய இறையினை மாட்டவைத்து பாதுகாத்து உணவாக்கின்றது என்று அறிந்தீர்கள் என்றால்  ஆச்சரியப் படும் வகையில் அமைந்திருக்கும். சிலந்தி உடலில் சுரக்கும் ஒரு சிறு நூல் போன்ற திரவதினை கொண்டு முதலில் மரத்திலோ, செடியிலோ, அல்லது கட்டிடத்திலோ இணைக்கின்றது. தொடர்ந்து அடிபகுதியினை நோக்கி ஊர்ந்து இழுத்து சென்று கட்டுகிறது. பின்பு ஒவ்வொரு முனையாக இழுத்து கட்டுகிறது. இப்படி கட்டப் பட்ட வலைகளில் தனது திரவத்தினை வைத்து மீன் வலைபோன்று கட்டுகிறது  அதன் வலை 2 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள். வலையினை மிக நெருக்கத்தில் கட்டுவதால் அவைகள் வலுவாக இருக்கும், காற்றடித்தாலும் ஊஞ்சல் போன்று ஆடும் திறன்கள் கொண்டது. இந்த வலைக்குள் வந்து சிக்கும் சிறு பூச்சிகளை நகர விடாமல் சிறைபிடித்து சுருட்டி சிறுக, சிறுக இறுக்கி உணவாக படிப்படியாக உட்கொள்கின்றன.

தேனை நக்கி சுவைக்காதவர் சுகர் நோயாளி கூட இருக்க முடியாது. அந்த சுவை மிகு தேனை எப்படி தேனீக்கள் உருவாக்கின்றன, அது பாதுகாக்கும் கூடுகள் எப்படி கட்டுகின்றது  என்பதினை பார்க்கலாம். வானுயர கட்டிடங்கள் வையகத்தில் பார்த்திருக்கின்றோம், அவையெல்லாம் கட்டிட கலைஞர்களின் அற்புதமான படைப்புகள் என்று பார்த்து மூக்கில் விரல் வைக்கின்றோம். ஆனால் தேனீக்கள் கட்டும் கட்டிடங்கள் அறு கோண வடிவில் உள்ளன அதுபோன்ற கட்டிடங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அவைகள் உண்மையிலேயே தேர்ந்தெடுத்த கணித வல்லுநர்கள் என்பதினை  எப்படி கட்டுகின்றன அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். உங்களுக்குத் தெரியுமா தேனீக்கள் வயிற்றின் அடிப்பகுதியில் ஒரு வித பிசின் போன்று தேனை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. அவை மெழுகு போன்று இருக்கும். 2.5 கிலோகிராம் மெழுகு உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 4 கிலோ கிராம் தேன் பயன் பெரும். கூடுகள் கட்ட குறைந்தளவு தேனைக் கொண்டு எப்படி கூடு கட்டுவது என்று யோசித்த தேனீக்கள் (honey comb conjecture) ஹனி கோம்பு கன்ஜெக்சர் என்ற என்ற அறு கோண வடிவில் தனது கூட்டினை உருவாக்கியுள்ளது. வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ, முக்கோண அமைப்பிளோ கூடு கட்டினால் அதிக படியான மெழுகினை செலவழிக்க வேண்டும் என்று ;பல்லாண்டாக அதனைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கிய தாமஸ் ஹெல்ஸ்(Thomas Halx) 1999ம் ஆண்டு நிரூபித்துள்ளார். தன் உடலிருந்து சுரக்கும் ஒரு வித திரவத்தினால் சுவர்களின் அடர்த்தி 0,1மில்லி மீட்டருக்கும் குறைவாக 120 டிகிரி வடிவத்தில் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு அறுகோண அமைப்பில் அமைத்துள்ளது என்றால் தேனீக்களுக்கு பொறியல் பாடம் எடுத்தது யார் என்ற கேள்வி எழுப்பினால் அது ஏக இறைவன் என்றால் நாத்தீகரும் ஒத்துக் கொள்ளத்தானே செய்ய முடியும். இவ்வளவிற்கும் தேனீக்களின் மூளை அளவு வெறும் கன மில்லி மீட்டருக்கு குறைவானதாகும், 1933 வருடம் இயற்பியல்(Physics) துறையில் நோபல் பரிசினை வென்ற பால் டுராக்(Paul Durac) இறைவன் மிக உயர்தர கணிதவியலாளர் மேற்கூறிய கணிதத்தினை கற்று தந்துள்ளார் என்றுகூறியுள்ளார். இதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே பாலைவனத்தில் பிறந்து, வளர்ந்த நபி பெருமானும் உறுதி படுத்துகிறார்கள்.

நமது இரவு தூக்கத்தினை கெடுப்பது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள ரத்தத்தினையும் உறிஞ்சிவிட்டு மலேரியா, சிக்கன்னுயா போன்ற நோய்களையும் பரப்பும் கண்ணுக்கு குறைந்த அளவே தெரியும் கொசுவினை ஒழிக்க விதவிதமான வழிமுறைகளை கடைப் பிடிக்கிறோம். அந்த கொசு உங்கள் கைகளுக்கு மட்டும் அகப்பட்டால் அடித்து கொள்ளாமல் விடுவதில்லை. உங்கள் பகைமையாளர்களைக் கூட உன்னை கொசு அடிக்கிறமாதிரி அடிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறீர்கள். அது சரி அந்த கொசுவின் உடல் அமைப்பினை பார்த்திருப்பீர்களா. யானை உணவினை எடுக்க எப்படி தும்பிக்கையினை உபயோகப் படுத்துகிறதோ அதேபோன்று தனது இறையினை எடுக்க கொசுவின் தும்பிக்கையில் ஆறு ஊசிகள் இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா. அவை ஒவ்வொன்றும் தனித்தனி வேலையினை செய்கின்றது. அதில் ஒரு ஊசி உடலில் உள்ள ரத்தத்தினை உறிஞ்சுகிறது.  கொசுவின் தலயில் 100 கண்கள் உள்ளன. வாயில் 48 பற்கள் உள்ளன. உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள் ஒவ்வொரு பக்கமும் 3 இறக்கைகள் இருக்கின்றது. பச்சோந்தி இடத்திற்கேட்ப தனது நிறத்தினை மாற்றுகிறது என்று கேள்விப் பட்டுள்ளோம். அதுபோல கொசுவும் தன் நிறத்தினை மாற்றுமாம். எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தெர்மோமீட்டர் பொறுத்தப் பட்ட நுண்ணிய கருவி அதனுள் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் வேளையே மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தினை உறிஞ்சும்போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு மனிதனுடைய நிறத்திற்கேட்ப தனது நிறத்தினை மாற்றிக் கொள்வது. தான் எடுக்கப் போகும் ரத்திற்கான முதலாளி 60கி.மீ தொலைவிலிருந்தாலும் நுகர்வால் அறிந்து கொள்வது. கொசுவின் முதுவின் மேற்பரப்பில் கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு  பிளாஸ்மோடியம் (Plasmodium) என்ற ஒட்டுண்ணி உள்ளதாம்.அதன் மூலம் தான் மனிதர்களுக்கு நோயை பரப்புகிறதாம். கொசு மனித ரத்தத்தினை குடித்த பின்பு அதன் உடல் எடை இரண்டு மடங்கு கூடி விடுமாம். திருகுரானில் (2:26) வசனத்தில் கொசுவினைப் பற்றி கூறுகிறான். ‘அல்லாஹ் கொசுவையோ அதற்கு மீதுள்ளதையோ உவமையாக காட்டுவதிற்கு வெக்கப் படுவதில்லை(2:26 அல் குரான்)

பறவைகள் தங்கள் வீடுகளை மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, மலைகளின் இடுக்குகளிலோ எப்படி அமைத்துக் கொள்கிறது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். முதலில் காய்ந்து விழுந்த சிறு குச்சிகள் அல்லது கீழே கிடைக்கும் சிறு கட்டுக்கம்பிகள் எடுத்து தளம் அமைகிறது. அதன் பின்பு மற்ற குச்சிகள், சிறு கம்பிகளை எடுத்து தனது அலகாளும், கால்களாகும் பிடித்துக் கொண்டு கூடு அமைகின்றது. பறவைகள் ஏன் தனது கூடுகளை அமைத்துக் கொள்கிறது என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? பறவைகள் முட்டை இட்டு, அடை காத்து குஞ்சு பொறிக்கவும், அந்த முட்டைகளை தின்ன முயற்சிக்கும் பாம்புகள், நரிகள், அணில்கள், நாய்களிடமிருந்து பாதுகாத்து அடைகாக்க அதுபோன்ற கூடுகளை கட்டுகின்றன. ஒரு நாடு விட்டு ஒரு நாட்டிற்கு பறந்து செல்லும்(migratory) பறவைகள் வசந்த காலத்தில் வடக்கு நோக்கி பயணமாகி அந்தந்த நாடுகளில் விளையும் கதிர்களை உணவாக எடுத்துக் கொண்டு முட்டையிட்டு குஞ்சும் பொறித்து அந்த குஞ்சுகள் பெரிதான பின்பு கோடை காலங்களில் தெற்கு நோக்கி பயணம் மேற்கொள்ளுமாம். தமிழ்நாட்டுக்கு அப்படிதான் சிறவி, வடுவதாரா போன்ற பறவைகள் அறுவடை காலங்களிலும், நீர் நிலை நிரம்பி இருக்கும் பகுதிகளிலும் பார்ப்பது ஆஸ்திரேலியாவைச் சார்ந்ததாம். பறவைகள் பற்றி திருகுரானின் 79 வசனம் ‘அன்னாகி’யில் விவரமாக சொல்லப் பட்டுள்ளது.

எந்த இனிப்பு பண்டங்களையும், அல்லது சிதறும் உணவு பண்டங்களையும் கண்டால் ஈக்களுக்கு கொண்டாட்டம் தான். ஈக்களின் படைப்புகளைப் பற்றி குரான் (22:73) வசனத்தில் தெளிவாக கூறுகிறது. இறை மறுப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் கூட ஒரு ஈயைக் கூட உருவாக்க முடியாது என்று சொல்கிறது.என்று சொல்கிறது. ஒரு தடவை அதன் வாயிலிருந்து எடுத்த உணவினை நீங்கள் திரும்ப எடுக்கவும் முடியாது அதனை சாப்பிடவும் முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஈக்களின் வகைகள் 30,000 இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஈக்கள் மணிக்கு 5 கி.மீ பறக்கக் கூடியது. அதன் கண்களில் 4000 கூட்டு லென்ஸ்கள் உள்ளன.ஈக்களுக்கு பற்கள் கிடையாது. நேரடியாக முழுங்கி விடும் தன்மை கொண்டது. அது சரி அவை எப்படி ஜீரணிக்கின்றது என்று கேட்டால், தான் உண்ணும் பொருள் மீது அமர்ந்து ஒரு வித திரவத்தை உமிழ்ந்து அதனை கரைத்து நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது என்று 500 ஆண்டுகளுக்கு முன்பு மைகிரேஸ்க்கோப்பு மூலம் அறியப் பட்டுள்ளது.

நமது அருகில் ஊர்ந்து செல்லும், அல்லது மரம், செடி போன்றவற்றில் தவழும் எறும்புகள் படைப்பிணத்தினையும், அதன் புற்றுகளையும் நீங்கள் வெளியே பார்த்திருப்பீர்கள். சிலர் அதன் புற்றுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் பாலையும் ஊற்றுவர். அதனைப் பற்றி வாதின் நமல் 27:18-19 கூறும் போது அதனை எறும்பின் பள்ளத்தாக்கு என்று கூறுகிறான். அந்த புற்று நகரத்தில் நேர்த்தியான சாலைகள், உணவு கிடங்குகள், உறைவிடம், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடங்கள், நர்சரி, குப்பை போடும் இடம், அரசி அறை போன்று தனித்தனியே ஒரு கோட்டை போன்று உள்ளன என்று அறிவியலாளர் வீடியோ படத்துடன் பெர்ட் ஹால்டப்ளர்

( Bert Holldobler) மற்றும் அகழ் ஆராய்ச்சியாளர் லூயிஸ் போர்ஜ் கூறியுள்ளது. இறைவனின் இறக்க நெஞ்சம் சிறு பிறவிகளுக்கும் இருப்பதனை எடுத்து காட்டுகின்றதலல்லவா? ஆகவே நம்மை படைத்த ஏக இறைவனுக்கு என்றென்றும் நன்றி உணர்வுடன் இருப்பது நமது தலையாய கடமையாகும்.

 

 

         

Tags: கட்டுரை

Share this