லால்பேட்டையில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்..!
பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, அல்ஜமா பைத்துல்மால் மற்றும் லால்பேட்டை துபாய் ஜமாத் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று புதன்கிழமை 05-07-2023 லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் மதரஸா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 378 பேருக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 69 பேருக்கு இலவசமாக அறுவைசிகிச்சை செய்ய கண்டறியப்பட்டு பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர்கள்.
இம்முகாமை துஆ செய்து துவங்கி வைத்த JMA துணைமுதல்வர் மவ்லவி சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களுக்கும், இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்து கலந்துக்கொண்டு சிறப்பித்த லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் நிர்வாகிகளுக்கும், பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் வருகை தந்த மருத்துவக்குழுவினருக்கும், மதரஸா மண்டபத்தில் நடத்த இடமளித்த லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் ஜமாத்தினர்களுக்கும், அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டு முகாமை சிறப்பித்த லால்பேட்டை துபாய், அபுதாபி, கத்தார், சவூதி ஜமாத்தினர்களுக்கும் எங்கள் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்..
Tags: லால்பேட்டை
மாஷா அல்லாஹ்...
பதிலளிநீக்குhttps://www.valaiyugam.com/04/07/2023/amazon-keypad-mobiles/