லால்பேட்டை துபாய் ஜமாத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது..!
ஏக இறைவன் அருளால் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 2022 - 2024 ஆண்டுக்கான 6வது செயற்குழு கூட்டம் நேற்று 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில் டேரா போர்ட் செய்து ஏரியாவிலுள்ள கிராண்ட் ஹைதராபாத் ரெஸ்டாரண்டில் ஜமாத் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மௌலவி A.R ரியாஜூல்லாஹ் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
அமீரகத்தில் சமீபத்தில் இறந்த மர்ஹும் நிஜார் அஹமது, மர்ஹும் ஜாபர் சாதிக், மர்ஹும் முஹம்மது அலி, ஆகிய மூன்று லால்பேட்டை சகோதரர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பொருளாலர் A.R ரபியுல் அஹ்மது வரவுசெலவு கணக்குகளை சமர்பித்தார், ஜமாத் நிர்வாக குழுவால் ஏற்கப்பட்டது.
செயலாளர் Z. பயாஜ் அஹமத் கடந்த 3 மாதங்களில் ஜமாத் செய்த செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அதன்பின் இனி வரும்காலங்காளில் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.. அதன்படி
* மார்ச் மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 36ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் ஜமாத்தின் மலர் வெளியீட்டு விழா நடத்துவது. அன்றே ஜமாத்தின் பொதுக்குழுக்கூட்டமும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
* லால்பேட்டை துபாய் ஜமாத்தின் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் டிசம்பர் மாதம் கடைசியில் நடத்த நிர்வாகக்குழுவால் முடிவெடுக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை