Breaking News

நெய்வேலி NLC விவகாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க முயற்சி மு.தமிமுன் அன்சாரியை காவல்துறை தடுத்து நிறுத்தியது...

நிர்வாகி
0

 

ஆகஸ்ட்.03.,


நெய்வேலி அனல் மின் நிலையத்தின் - NLC - நடவடிக்கைகளுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் பெரும் எதிர்ப்புகளை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.


சமீபத்தில் வயல்களில் விளைந்த பயிர்களை இயந்திரங்களை கொண்டு NLC நிர்வாகம் அழித்தது கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


NLC யின் வரம்பு மீறல்களுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து  ஜனநாயக வழி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


 இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க  மஜக தலைமையிலான குழு  சேத்தியாதோப்பு வந்தது.


மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், P.R. பாண்டியன் தலைமையில் செயல்படும்  தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் பிரதிநிதிகள் ராமச்சந்திரன், பிச்சாவரம் கண்ணன், பன்னீர்செல்வம், முத்துராமன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு முக்கூட்டு சாலை அருகே வந்தப் போது காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.


அவர்களுடன் அடுத்தடுத்து கார்களில் வந்த மஜகவினரும் தடுக்கப்பட்டனர்.


அப்போது,  DSP அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான காவலர்கள் தடுப்பு வேலி அமைத்து உள்ளே விட அனுமதி மறுத்தனர்.


மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசனும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க விடாமல் தடுப்பது ஏன்? என DSP யினர் கேட்டனர்.


பிறகு நூற்றுக்கும் மேற்பட்டோரை அனுமதிக்காவிட்டாலும், ஐந்து பேர் கொண்ட குழுவையாவது அனுமதிக்க வேண்டும் என்றனர்.


அதையும் காவல்துறை மறுத்ததால், மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், நெய்வேலி இப்ராகிம் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.


அதன் பிறகு NLC க்கு எதிராக மஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், ஒன்றிய அரசு NLC யின் நடவடிக்கைகளை நிறுத்த  வேண்டும் என்றும், தமிழக அரசு NLC க்கு துணைப் போக கூடாது என்றும் கூறினார்.


NLC யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற வந்த எங்களை காவல்துறை தடுத்தது தவறு என்றவர், விரைவில் அனைத்து தரப்பு சமூக செயல்பாட்டாளர்களுடன் திரட்டி, மீண்டும் இங்கு வந்து விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுவோம் என்றார்.


பிறகு அனைவரையும் அமைதியாக கலைந்து போகுமாறு வேண்டுகோள் விடுத்தார்.


இந்நிகழ்வில் இளைஞர் அணி மாநில செயலாளர் ஹமீது ஜெகபர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், கடலூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன், தெற்கு மாவட்ட தலைவர்  செய்யது காஸிம்  ஆகியோரும் உடன் பங்கேற்றனர்


மஜக கடலூர் தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் முகம்மது ரபீக், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முசரப், மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பைசல், இளைஞர் அணி துணைச் செயலாளர் மன்சூர், சதாம் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ஹாஜா மைதீன் உள்ளிட்ட திரளானோர் வருகை தந்திருந்தனர். 











Tags: செய்திகள்

Share this