Breaking News

மீலாது நபியை முன்னிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது.

நிர்வாகி
0

 

செப்.29 இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நாளான மீலாது நபி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 


மீலாது நபியை முன்னிட்டு சிதம்பரத்தில் சேவை உதவிகள் நடைபெற்றது.

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை உன் நோயாளிகள் 200 பேருக்கு பிரட், பழங்கள் வழங்கப்பட்டது. அன்று பிறந்த ஆறு குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. மாரியப்ப நகர் அன்பகம் முதியோர் இல்லம், இண்டேன் கேஸ் பின்புறம் அமைந்துள்ள CCWE மன வளர்ச்சி குன்றிய மாணவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பிரட், பழங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மஹபூப் உசேன் தலைமை வகித்தார். மௌலவி கணியூர் இஸ்மாயில் நாஜி, ஃபைசல் மஹால் முஹம்மது யாசீன் ஆசியன் ஷாப்பிங் மால் இக்பால், நவாப் பள்ளி ஜாக்கீர் உசேன், சையத் மொய்தீன், மிலன் ரெடிமேட் முஹம்மது எஹ்யா, அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்கர் அலி பட்டேல், கண்காணிப்பாளர் முஹம்மது அலிகான், லால்பேட்டை  ஏ.எஸ்.அஹமது, எள்ளேரி ஆரிஃபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவகாமி, தலைமை செவிலியர் இமாக்குலேட், முஹம்மது ஜக்கரியா,பி.அப்துல்ரஹ்மான், முஸ்தபா, முஸம்மில் உசேன், முதஸ்ஸிர் உசேன், மௌலவி ஹாபிள் ஷாஹுல் ஹமீது, இமாம் ஹஜ் முஹம்மது ரப்பானி, தைய்யுப் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Tags: சமுதாய செய்திகள்

Share this