இந்தியாவா? பாரத்தா? - இத்தேசத்தின் சுயம் நாமகர்னா தான் என்ன?
இந்தியாவா? பாரத்தா? - இத்தேசத்தின் சுயம் நாமகர்னா தான் என்ன?
*******************************************
இப்பொதுள்ள இந்தியாவுக்கான பெயருக்கு மட்டும் அல்ல, சங்பரிவார கூட்டம் 'அகண்ட பாரதம்' என்று காணும் கனவுக்கு கூட ஆங்கிலேயர்கள் மூலகாரணம்.
இப்போதைய இந்தியாவுடன் சேர்த்து பாகிஸ்தான், ஆஃகானிஸ்தான், பங்கலாதேஷ், பூடான், மாலத்தீவு, மியான்மர், நேபாள், இலங்கை, திபெத் உள்ளிட்ட நாடுகளையும் சேர்த்து நேரடியாகவோ, மறைமுகமாக ஆண்டு வந்தனர் ஆங்கிலேயார்கள்.
பலகட்ட, பலவிதமான எதிர்ப்புகளுக்கு பின் அவன் விட்டுச் சென்ற பகுதிகளை - "அண்டர்... ஓவர்... கிளீனர்... கேட்ச்..." என சிறுவர்கள் குச்சி எரிந்து, நாடு பிடித்து விளையாடுவார்கள். அதுவும் கட்டம் கட்டி விளையாடி பிடித்தால் தான் குழந்தைகளும் கூட ஏற்பார்கள். ஆனால், சம்பந்தமே இல்லாத களத்தில் பல்லாங்குழி விளையாடி விட்டு - மொத்தமும் 'என்னுது' என்றால்...? அவ்வாறு தான், ஆங்கிலேயன் விரட்டப்பட்டதற்கு அறவே சம்பந்தமில்லாமல் இருந்த சங்பாரிவார கும்பல் - கண்ணில் படும், காதில் கேட்குக் அக்கம் பக்கத்தை எல்லாம் 'என்னுது' என உரிமை கோருகிறது. அதற்கு அகண்ட பாரதம் என பெயரும் வைத்திருக்கிறது - இல்லாத ஊருக்கு போகாத வழி!
சாம்ராஜியங்களாகவும், சமஸ்தானங்களாகவும் சிதறிக் கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்தவன் ஆங்கிலேயன். அவன் அதற்கு வைத்த பெயர் இந்தியா. அவன் வைத்த பெயர் என்பதாலேயே 'இந்தியா' இப்போது புளிக்கிறது சங்கப் பரிவாரிகளுக்கு! சரி, இந்தியா புளிக்கிறது. இந்து என்ற பெயரையும் அவன் ஆட்சியில் தான் மறுவியதாக சொல்லப்படுகிறதே, அதுவும் கசக்குமா என்ன?
கசக்க கூடும்? அதனாலேயே தான் 'சனாதன மதம்' என்றொன்றை இப்போது மறு புழங்களுக்கு விடத் தொடங்கியிருக்கக் கூடும்?
இந்தியாவுக்கு அவர்களிட்ட பெயரும் வேண்டாம், இந்துவுக்கு வைத்த பெயரும் வேண்டாம் என்பது ஆங்கிலேய எதிர்ப்பால் வெளிப்படும் உணர்வா? - சத்தியமாக இருக்காது. ஏனெனில், ஆங்கிலேயனை விரட்ட வடக்கிலுன், தெற்கிலும் வகைபாடு இல்லாமல் போராட்டம் நடந்துக் கொண்டிருந்த போது, அப்போராட்டங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டுக் கொண்டிருந்த வேலையில் - இவர்கள் ஆங்கிலேயர்களின் காலணிகளை தங்கள் நாவால் நக்கிக் கொண்டிருந்தார்களாம், போதா குறைக்கு அடிமை சாசனமே எழுதியும் கொடுத்திருக்கிறார்கள்.
பிறகென்ன 75 ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்கள் மீது திடீர் கோபம்? அதுவெல்லாம் ஒன்றுமில்லை. தேர்தல் நெருங்கும் வேலையில் - தங்கள் மீது விழும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதில் தர முடியாததால் - மக்களை திசைதிருப்பும் வேலைகளே இவை!
பாரதம் என தனிப்பெயர் வருமா? வாய்ப்பில்லை, அதற்கு முன் அரசியல் சாசனப் பிரிவுகள் சிலவற்றை மாற்ற வேண்டும், அதற்கு நாடாளுமன்ற அவைகளில் அறுபத்து ஏழு சதவிகித ஆதரவு வேண்டும், மேலும் மாநிலங்களில் ஐம்பத்து ஒரு சதவிகிதம் ஆதரவளிக்க வேண்டும். அதெல்லாம் இப்போது நடக்காது.
ஒன்பது ஆண்டுகளாய் புட்டத்தில் சுண்ணாம்பு அடித்து அமர்ந்திருந்தவர்கள் - தேர்தல் நெருங்கும் இவ்வேலையில் தங்கள் மீது மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் நிலையில் 'பாரத்' கோசம் எழுப்புவது - திசைதிருப்பும் வேலையே அன்றி வேறில்லை!
கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போதோ, இடையில் நடந்த பல மாநில தேர்தல்களின் போதோ - இவர் கிளப்பிவிட்ட குடிவுரிமை திருத்த சட்டம், பொது சிவில் சட்டம், வேளான் சட்டம் போன்று தான், இந்த 'பாரத்' சமாச்சாரமும். காலங்கள் கடந்தால், காணாமல் போகும்...
நிற்க!
இந்தியா உலக வணிக வரலாற்றில் இடம் பெறத் தொடங்கியது - பட்டை, கராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட சமையல் மணப் பொருட்களை அரேபிய தீபகர்பகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்த வணிகத்தில் தான். இந்த மசாலா பொருட்களுக்கு அரபியில் 'பஹராத் - بهارات' என்று பெயர்.
உலகின் மூத்த மொழியான 'அராமிக்' இன்றைய சிரியா, பாபிலோனா பகுதிகளில் பேசப்பட்டவாதகவும், அது அரபிக்கு தாய் மொழியாக இருக்கலாம் எனவும் சிலரால் நம்பப்படுகிறது.
இந்த வரலாற்றுத் தொடர்பை சொல்லி 'பாரத்' என்ற பெயருக்கும் பின்னணியில் அரேபியர்கள் தான் இருக்கிறார்கள் என்று சொன்னால் - சங்கபரிவாரக் கூட்டம் 'பாரத'த்தையும் விட்டுவிட்டு வேறுபெயர் தேடுவார்கள். அதையும் 2029 தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
- மு.இ. நஸீருத்தீன்
8 செப்டம்பர் 2023
Tags: கட்டுரை