Breaking News

நவம்பர் 4ம் தேதி SMC மருத்துவமனை திறப்பு விழா.....

நிர்வாகி
0

 இன்ஷா அல்லாஹ் நவம்பர் 4ம் தேதி SMC மருத்துவமனை திறப்பு விழா..... 


ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை

ஒரு முன்னோட்டம்.

---------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.


நமது ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் மூலமாக நம் சமுதாயத்தினர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூக மேம்பாட்டிலும் சிறந்தோங்க  வேண்டும் என்கிற இலக்கைக் கொண்டு தூரநோக்குச் சிந்தனையோடு ஒரு மெகா திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். 


அதன்படி தமிழகத்தில் எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கி ஆறு மண்டலங்களாகக் கொண்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐந்து மாவட்டங்கள் இருப்பதாக நாம் வரையறை செய்து முதல் மண்டலமாக திருச்சி மண்டலத்தைத் தேர்ந்தெடுத்து நமது பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.   அதன்படி 300  ஏக்கர் நிலப்பரப்பளவைப்  பெற்று, 200 ஏக்கர் நிலப்பரப்பை டவுன்ஷிப் ஆகவும் 100 ஏக்கர் நிலப்பரப்பைக் கல்வி நிறுவனங்களாகவும் உருவாக்கத் திட்டமிட்டு மேம்பாட்டுப் பணிகளைத் திறம்பட செய்வது என முடிவெடுத்து  ஏறத்தாழ நாலரை ஆண்டுகளுக்கு முன்பாக இந்த முயற்சியிலே ஈடுபட்டோம்.  தமிழ்நாடு முழுவதும் 48 இடங்களை 300 ஏக்கர் பரப்பளவு உள்ள இடங்கள் என்று கண்டறியப்பட்டு அவைகளிலே சிறந்த ஒன்றாக திருச்சி மண்டலத்தில் இந்த முதல் திட்டத்தை நாம் தொடங்கவிருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.  இது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சியை நோக்கிச் செல்லுகிற போது 15 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலையிலேயே வேப்பூர் என்னும் இடத்தில் அமைந்து இருக்கிறது. திருச்சியிலிருந்து 110 கிமீ.


ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை மூலமாக தங்கும் வசதி கொண்ட உயர்நிலைப் பள்ளிக்கூடம், அறிவியல்  மற்றும் கலைக்  கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, நர்சிங் கல்லூரி என பல்வேறு நிறுவனங்களைத் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நமது சமுதாயத்தின் நிர்வாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் இதுவரையிலும் மருத்துவக் கல்லூரி அறவே இல்லை என்கிற நம் சமுதாய மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு ஏற்ப நம்முடைய மெகா திட்டப் பணிகளில் மற்ற கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு முன்பாக, மருத்துவக் கல்லூரி என்பது பெரிய திட்டம் என்கிற காரணத்தினாலே அதற்கு முன்னுரிமைத் தரப்பட வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி  பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


அதன் முதல் கட்டமாக, ஒரு நடுத்தர அளவிலான மருத்துவமனையைக் கட்டி முடித்து, அதனை நாம் வருகிற 04/11/2023 அன்று தொடங்கவிருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். அதே நாளிலேயே, மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடத்திற்கும்,  மருத்துவக் கல்லூரியின் பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.


அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புச் கேட்டுக் கொள்கிறோம்.




Tags: சமுதாய செய்திகள்

Share this