Breaking News

சிதம்பரம் நகரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முப்பெரும் விழா..!

நிர்வாகி
0



சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உத்தம நபிகள் நாயகம் (ஸல்) உதயதின மீலாது விழா, சமூக நல்லிணக்கப் பெருவிழா, மதரஸா ஜாமிஆ தாருல் ஹுதா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா 21/10/2023 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சிதம்பரம் உழவர் சந்தை எதிரில் லப்பைத் தெருவில் நடைபெற்றது.


முப்பெரும் விழாவின் முதல் அமர்விற்கு கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஏ. சஃபியுல்லாஹ் மன்பஈ தலைமை வகித்தார். லப்பைத் தெரு பள்ளிவாசல் தலைவர் ஏ. முஹம்மது ஹலீம், பூதகேணி பள்ளிவாசல் தலைவர் பி. ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மதரஸாவின் ஸ்தாபகரும், சிதம்பரம் நகர முஸ்லிம் லீக் செயலாளருமான மவ்லானா கே.எம். ஷாஹுல் ஷமீத் பாகவி நிகழ்வை தொகுத்து வழங்கினார். மதரஸாவின் தலைவர் மவ்லானா எஸ். சுஹ்பத் அலி மிஸ்பாஹி வாழ்த்துரை வழங்கினார். மதரஸா காஷிஃபுல் ஹுதா பேராசிரியர் மவ்லானா பி.எம். முஹம்மது அலி பாகவி பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மதரஸாவின் பொருளாளர் எஸ். அப்துல் ஹாதி நன்றியுரையாற்ற, நவாப் பள்ளிவாசல் இமாம் மவ்லானா பி. ஹஜ் முஹம்மது ரப்பானி துஆச் செய்தார்.


விழாவின் இரண்டாம் அமர்வு சிதம்பரம் நகர முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.எம்.எம். அன்வர் அலி தலைமையில் நடைபெற்றது. 


கடலூர் தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ. ஷஹாபுத்தீன், வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம். ராஜா ரஹீமுல்லாஹ், மாவட்ட செயலாளர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் எம். முஹம்மது ஜகரிய்யா, மாவட்ட இளைஞரணித் தலைவர் எம். முஹம்மது முஸ்தஃபா, கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லானா முஹம்மது ஷிப்லி ரஹ்மானி மற்றும் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், இமாம்கள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


மதரஸா மாணவர்கள் கிராஅத் ஓதினர். தலைமை நிலைய பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல்கள் பாடினார். கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முஹம்மது ஜகரிய்யா வரவேற்புரையாற்றினார். சிதம்பரம் நகர கௌரவ ஆலோசகர் கவிஞர் டி.எம்.இ. மஹ்பூப் ஹுசைன் ஜவ்ஹர் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.


மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ். அப்துர் ரஹ்மான் ரப்பானி துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசின் உலமாக்கள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் கனியூர் மவ்லானா எம்.ஒய். இஸ்மாயில் நாஜி மன்பஈ, சிறுபான்மை நலக்குழு தலைவர் பி. மூஸா (எ) இப்ராம்சா, விசிக மாவட்ட செயலாளர் அரங்க. தமிழ் ஒளி, மதிமுக வழக்கறிஞர் கே.வி. மோகன சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் எஸ். ராஜா, தமுமுக மாவட்ட செயலாளர் ஜே. முஹம்மது அஸ்லம், திராவிடர் கழகம் ஏ. சித்தார்த்தன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில பொதுச்செயலாளர் மவ்லானா வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி, தர்மயுக வழிப்பேரவையின் அய்யாவழி ஒருங்கிணைப்பாளர் அய்யாவழி பி. பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.


தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ், கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முஹம்மது ஜகரிய்யா, நகரத் தலைவர் எஸ்.எம்.எம். அன்வர் அலி, செயலாளர் மவ்லானா கே.எம். ஷாஹுல் ஹமீத் பாகவி, பொருளாளர் ஏ.வி. அப்துல் ரியாஜ் உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.


கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஏ. சுக்கூர் நன்றியுரைக்குப் பின், லப்பைத் தெரு பள்ளிவாசல் இமாம் மவ்லானா ஏ. முஹ்யித்தீன் பாவா மிஸ்பாஹி துஆவுடன் விழா நிறைவு பெற்றது.


பேரெழுச்சியோடு நடைபெற்ற இவ்விழாவில் சிதம்பம், பரங்கிப்பேட்டை, பின்னத்தூர், லால்பேட்டை, மங்கலம்பேட்டை, ஆயங்குடி, கோட்டக்குப்பம், மானியம் ஆடூர், கொள்ளுமேடு, டி.நெடுஞ்சேரி, பண்ருட்டி ஆகியவற்றின் முஸ்லிம் லீக் பிரைமரி நிர்வாகிகள் - செயல்வீரர்கள் மற்றும் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். 


முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.







Tags: செய்திகள்

Share this