விருதாச்சலத்தில் நடைபெற்ற “ முதுபெரும் உலமாக்களை கண்ணியம் செய்வோம்” நிகழ்ச்சி..!
இன்று 21.11.2023) விருத்தாச்சலம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் மண்டபத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் “ முதுபெரும் உலமாக்களை கண்ணியம் செய்வோம்” நிகழ்ச்சி மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலார் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ஹழ்ரத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பொருளாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் கண்ணியம் செய்யும் நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தார்.
துணைப்பொதுச்செயலாளர் மௌலானா இல்யாஸ் ரியாஜி அறிமுக உரையாற்றினார். மூத்த ஆலிம் கணியூர் இஸ்மாயில் நாஜி, வழிகாட்டுக்குழு உறுப்பினர் முஃப்தி நூருல் அமீன் ஹழ்ரத் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்வில் இவ்வாண்டு 75 வயதைக்கடந்த 19 ஆலிம்களுக்கு நினைவுப்பரிசும் ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டது.
பிளாக் துலிப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நடுக்கடை யஹ்யா அவர்கள், விருத்தாச்சலம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், புரவலர்கள் பங்கேற்று சிறப்புத்தனர்.
முன்னதாக
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்றார்கள். பொதுச்செயலாளர் மௌலானா Dr. V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி கடந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்டதை விளக்கினார்கள். பொருளாளர் மௌலானா முஹம்மது மீரான் மிஸ்பாஹி வரவு செலவு விபரங்களை தாக்கல் செய்தார்கள்.
மாநில நிர்வாகத்துக்கான தேர்தலை நடத்திட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதிலுமிருந்து செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
Tags: சமுதாய செய்திகள்