விளையாட்டுப் பயிற்சிகள் வேண்டும்
.
லால்பேட்டையில் அமைந்திருக்கும் லால்கான் தோப்பில் மத்ரஸா மன்பவுல் அன்வார் சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ஒரு பக்கம் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் ஊர் முழுக்க பேச்சுப் பொருளாக மாறிவிட்டன.
இதுவும் ஒரு நல்லதுக்குத் தான் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய திடல் இருந்தும்..! விளையாட்டு உபகரணங்கள் வாங்க போதுமான செல்வங்கள் இருந்தும்..! நமதூரிலிருந்து ஒரு நபர் கூட மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றதாக தெரியவில்லை.
நீச்சல், கால்பந்து, பேட்மிண்டன் போன்ற பல்வேறு விளையாட்டுகளின் பயிற்சிகள் நமதூர் வாலிபர்களுக்கு தேவையான ஒன்று நினைவில் வைப்போம்.
விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சிகள் ,ஊக்குவிப்பு, உத்வேகம் அளித்து
வளர்ந்து வரும் புதிய தலைமுறைகளுக்கு மாவட்டம் அல்லது மாநிலம் தழுவி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற ஏதுவாக சரியான பயிற்சியாளரை நியமித்துப் பயிற்சி கொடுத்தல் வேண்டும். இதுத்தான் இன்றைய தலையாயக் கடமை. இதை மத்ரஸா அல்லது கட்சிகளோ..! ,இயக்கங்களோ..! செய்தால் சாலச் சிறந்ததாக இருக்கும்.
இவ்வளவு பெரிய நகரத்தில் ஏதோ ஒரு விளையாட்டில் பயிற்சி பெற்ற ஒரு விளையாட்டு வீரர் கூட இல்லை என்பது கவலைக்குரிய ஒன்றுதானே..!
விளையாட்டு மைதானத்தைக் காக்க அதிகமான கருத்துக்கள் பரிமாற்றம் செய்யப்படும் இந்த நேரத்தில், நமதூரில் வாலிபர்களிடம் விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்தவும் , அதற்கான உபகரணங்களை பெறுவது பற்றிய விவாதங்களுக்கு வழிவிடுவோம்.
A.H.யாசிர் ஹசனி
02/11/2023
Tags: லால்பேட்டை