Breaking News

லால்பேட்டையில் LALPET KIDS GOT TALENT

நிர்வாகி
0

 



இன்ஷா அல்லாஹ்...

இடம்: கொத்தவால் தெரு JMA மஹால்,

நேரம்: மதியம் 2:00 மணி முதல்

நாள்: 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை.

முன்பதிவு : 24-11-2023 இரவு 10:00 மணிக்கு முன்பாக.


1. இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் நாம் ஏற்கனவே கொடுத்துள்ள ஐம்பது வினாக்களுக்கு வீட்டிலிருந்து சரியான பதிலை படித்து விட்டு வர வேண்டும். நிகழ்ச்சி அன்று 20 கேள்விகள் கொண்ட வினாத்தாள் கொடுக்கப்படும். அவ்வினாத்தாளில் A, B, C, D என பதில்கள் இருக்கும், அதில் குழந்தைகள் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். (ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகளும், பதில்களும் இருக்கும்)


2. குழந்தைகளை ஊக்குவிக்க  நிகழ்ச்சி அன்று சில உள்விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் அதிலும் பங்கு பெற்று தங்களுடைய திறனை வெளிப்படுத்த வேண்டும்.


3. மதிப்பீடு செய்ய தேவை ஏற்படும் பட்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு விஷயங்களில் கூட்டு விகிதத்தின் அடிப்படையில் திறமை தேர்வு செய்யப்படும்.


4. கூடுதலாக மாணவ மாணவிகளுக்கு விருப்பம் இருப்பின் தங்களுடைய திறனை வெளிப்படுத்த மினி ப்ராஜெக்ட், ட்ராயிங்,  கிராஃப்ட், மெமரி பவர், மேஜிக் போன்ற ஏதேனும் ஒரு வழியில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி கூடுதல் பாராட்டு சான்றிதழ்களையும், பரிசு பொருட்களையும் வெல்லலாம். (இதற்கு தேவையான எந்த பொருளாக இருந்தாலும் பொருட்களை அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்.)


5. முன்பதிவு செய்வதற்கு குழந்தைகள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திலேயே செய்யலாம் அல்லது குழந்தைகளின் பெற்றோர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள தொலைபேசி, வாட்ஸ்அப், முகநூல் போன்ற ஏதேனும் ஒரு பொது ஊடகம் மூலமாக குழந்தைகளின் பெயரையும், பெற்றோர் பெயரையும், படிக்கும் வகுப்பையும் பதிவு செய்து கொள்ளலாம்.


6. ஒன்றாம் வகுப்பு மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் மட்டும் போதுமானது.


7. நிகழ்ச்சிக்கு பள்ளிகளின் சார்பாக பள்ளி ஆசிரியர்கள் வருவதற்கு அனுமதி இல்லை, பொது நபராக மட்டுமே வர வேண்டும். பெற்றோர்கள் வருவதற்கு அனுமதி உண்டு.


8. சான்றிதழ்களில் குழந்தைகளின் பெயர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எழுத்து பிழை இல்லாமல் எழுதுவதற்கு சுலபமாக இருக்க குழந்தைகள் பள்ளியுடைய ID யை நிகழ்ச்சி அன்று கொண்டு வந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இலகுவாக இருக்கும்.


9. ரூபாய் 25,000 பரிசுத் தொகை என்பது முதல் பரிசோ, இரண்டாம் பரிசோ கிடையாது, ஒட்டுமொத்தமான பரிசு பொருட்களின் மதிப்புகள் 25,000 ரூபாய். தேவைப்படும் பட்சத்தில் அது 30,000 ரூபாயாக உயர்த்தப்படும்.


10. 2010 ஆம் ஆண்டு நாம் லால்பேட்டையில் நடத்திய குர்ஆன் மற்றும் அறிவியல் கண்காட்சி பேனர்களில் சிலவற்றை காட்சிப்படுத்த உள்ளோம், வருகை தாருங்கள்.!


11. நமது இந்த நிகழ்ச்சிக்கு எந்த நுழைவு கட்டணமோ, பதிவு கட்டணமோ கிடையாது.! முற்றிலும் இலவசம்..!


மேலும் விபரங்களுக்கு: +91-9791 143 500 / +91-8637 488 677 / +91-9487 918 294

Tags: லால்பேட்டை

Share this