அமீரக (UAE) தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் இந்திய நல்வாழ்வு பேரவை (Indian welfare forum) நடத்திய இரத்த தான முகாம்...!
இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் இந்திய நல்வாழ்வு பேரவை (Indian welfare forum) நடத்திய இரத்த தான முகாமில் துபாய் மண்டலத் தலைவர் உமர் ஃபாருக் அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். எண்பதிற்கும் அதிகமான மக்கள் இரத்தக் கொடை செய்தனர்.
இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP, தமுமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சுல்தான் மொய்தீன், SMI மாநிலத் துணைச் செயலாளர் காயல் இர்ஷாத், ஜப்பார் பாய் பிரியாணி நிறுவனர் ஜப்பார் பாய், அல்மனார் சென்டர் அழைப்பாளர் மௌலவி முஃபாரிஸ் மற்றும் திமுக நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
அமீரக IWF தலைவர் அப்துல் ஹாதி, துணைத் தலைவர் AS இப்ராஹிம், மண்டல நிர்வாகிகள் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் , சேக்தாவூத் , யாசீன் , மன்னை அமீன் , லால்பேட்டை யாசர் அராஃபத் ,அன்சாரி , சாதிக், நியாஸ், கலீபதுல்லா. சோனாப்பூர் அயூப் உள்ளிட்ட அனைத்து IWF நிர்வாகிகளும் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அனைவருக்கும் எம்முடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
தொழில் அதிபர் கடலூர் ஜின்னா, தி மு க அமீரக தலைவர் SS மீரான், தொழிலதிபர் சிங்கபூர் ஹவுஸ் நசீர், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசீன், தொழிலதிபர் இளையான்குடி அபூதாஹீர், தொழிலதிபர் ஆபித் ஜுனைத், சகோதரி நைனா யாஸ்மீன், சகோதரி RJ அஞ்சனா, மருத்துவர் முகம்மது இபுராஹிம் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Tags: உலக செய்திகள்