Breaking News

லால்பேட்டையில் தமுமுக நடத்திய வழிபாட்டுத் தளங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

நிர்வாகி
0

 



டிசம்பர்-6 வழிபாட்டுத் தளங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் முஹம்மது ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ப. அப்துல் சமத் MLA, தமுமுக மாநில செயலாளர் கோவை எம்.எஸ்.ஹமீது விடுதலை சிறுத்தை கட்சி  மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் MLA மகஇக மாநில பொதுச் செயலாளர் கோவன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கு வலிமை சேர்த்தனர்.









Tags: சமுதாய செய்திகள் லால்பேட்டை

Share this