லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 36 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி,சிறப்பு மலர் வெளியிட்டு விழா...!
லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 36 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் மலர் வெளியிட்டு விழா வரும் மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் துபாய் பணியாஸ் மெட்ரோ அருகிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
தாயகத்திலிருந்து லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சிறப்பு அழைப்பாளராக லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி முதல்வரும், கடலூர் மாவட்ட காஜியுமான ஷைகுல் ஜாமிஆ, முஃப்தி, ஹாபிழ் காரி மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹழ்ரத் கிப்லா அவர்கள் வருகை தந்து ரமலான் சிறப்புரையாற்றி லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சிறப்பு மலரை வெளியிட இருக்கிறார்கள்.
அதற்கான அழைப்பினை ஹஜ்ரத் அவர்களிடம் லால்பேட்டை துபாய் ஜமாத் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் நேரில் வழங்கினார்கள்.
Tags: உலக செய்திகள் லால்பேட்டை