Breaking News

லால்பேட்டை புனிதமிகு புகாரி ஷரீப் 48 ஆம் ஆண்டு நிறைவு விழா..!

நிர்வாகி
0

 


லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா சபை சார்பில் கடந்த 48 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புனிதமிகு புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் நிறைவு விழா ஜாமிஆ மன்பவுல் அன்வார் தாருல் தப்ஸீர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.


ஜாமிஆவின் முதல்வரும்,கடலூர் மாவட்ட அரசு காஜியமான மௌலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமை வகித்தார்.


திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலானா  ரூஹூல் ஹக் ஹஸ்ரத் சிறப்புரையாற்றினார்.


ஜாமிஆ பேராசிரியரும் நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா சலாஹூதீன் வரவேற்று பேசினார் மௌலானா

காரி முஹம்மது அஹ்மது ஹஜ்ரத் துவக்க உரையாற்றினர் 

ஜாமிஆ துணை முதல்வர் மௌலானா சைபுல்லா ஹஜ்ரத், பேராசிரியர்கள் மௌலானா     அப்துல் அலி ஹஜ்ரத்,   மௌலானா அப்துல் சமது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்

ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபுக் கல்லூரி தலைவர் M.F சாதிக், செயலாளர் K.A அமானுல்லா,பொருளாளர் மௌலானா A.S அப்துல் ரஹ்மான் ரப்பானி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்,ஜமாஅத்தார்கள் சமுதாய பிரமுகர்கள் திரளாக பங்கேற்று துஆ மஜ்லிஸில் பங்கேற்று சிறப்பித்தனர்.


Tags: லால்பேட்டை

Share this