Breaking News

லால்பேட்டை புதுப்பள்ளிவாசலில் 75வது குடியரசு தின விழா...!

நிர்வாகி
0

 


லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் இந்தியத் திருநாட்டின் 75வது குடியரசு தின விழா பள்ளிவாசல் முத்தவல்லி ஏ.பி. ஜாகீர் ஹுசைன் தலைமையில் இன்று காலை (26/01/2024 வெள்ளிக்கிழமை) 7:00 மணியளவில் நடைபெற்றது.


புதுப்பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவை, பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஹாஃபிள் ஏ. முஹம்மது உஸாமா இறைமறை வசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். ஓ.ஹெச். முஹம்மது மன்சூர் வரவேற்புரையாற்றி, நிகழ்வை தொகுத்தளித்தார்.


லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் கௌரவ தலைவர் ஜே. அப்துல் ஹமீத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். யூ. சல்மான் பாரிஸ் குடியரசு தினத்தைப் பற்றிய சிறப்புகளை விளக்கி  சிறப்புரையாற்றினார்.


இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அ. முஹம்மது பயாஸ் தேசிய கீதம் பாடினார். புதுப்பள்ளிவாசல் இமாம் மவ்லானா ஏ.ஆர். ரிழ்வானுல்லாஹ்  பிரார்த்தனையோடு நிறைவு பெற்ற இவ்விழாவில் ஜமாஅத்தார்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.





Tags: லால்பேட்டை

Share this