Breaking News

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்

நிர்வாகி
0

 


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இன்று 23-1-2024 செவ்வாய்க்கிழமை லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் நகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா மவ்லவி ஷைகுல் ஜாமிஆ A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது


மவ்லவி அமீனுல் ஹுசைன் மன்பயீ கிராஅத் ஓதினார்


நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி 

A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை மற்றும் 48 ம் ஆண்டு புகாரி ஷரீஃப் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்


ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர்கள்  மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலிம்கள் திரளாக கலந்து கொண்டனர்


பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது


இன்ஷாஅல்லாஹ் வரும் 25-2-2024 அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் மக்தப் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது


இன்ஷா அல்லாஹ் 5-3-2024 அன்று

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ரமளானே வருக பெண்கள் சிறப்பு பயான்  நடத்துவது 


புகாரி ஷரீஃப் மஜ்லிஸுக்காக தாரளமாக நன்கொடை வழங்கியவர்கள் பிஸ்கட் சீரணி வழங்கியவர்கள் அசர் மற்றும் மஃரிப் நேரங்களில் சிற்றுண்டி வழங்கியவர்கள் மேலும் சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு தந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது





Tags: லால்பேட்டை

Share this