லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது
நிர்வாகி
0
கடலூர் மாவட்டம் லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தேசிய மாணவர் படை சாரணர் படையினர் அணிவகுப்புடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பத்ஹீத்தீன் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
இந்நிகழ்வில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் பொருளாளர் அப்துல் ரஹ்மான் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மர்ஜுக், நிஜார் அஹமத், ரியாஜுல்லா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் அப்துல் ரஷீத், சமூக ஆர்வலர் ஜெய்கர் லால்பேட்டை துபாய் ஜமாத் செயலாளர் பயாஜ் அஹமது மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை