லால்பேட்டையில் நடைபெற்ற ரப்பானிகள் பேரவை செயற்குழு கூட்டம்..!
ரப்பானிகள் பேரவை செயற்குழு கூட்டம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் இன்று காலை சிறப்புடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ரப்பானிகள் பேரவை தலைவர் முகமது சுல்தான் ரப்பானி தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர் முகமது ஜுபைர் ரப்பானி இறை வசனம் ஓதினார். பேரவை செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துர் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரை ஆற்றினார்.
பேரவையின் செயலாளர் மௌலவி T. முஜிபுர் ரஹ்மான் ரப்பானி நோக்க உரையாற்றினார்.
பேரவையின் மூத்த தலைவர் மௌலவி O.M.காஜா மொய்னுதீன் ரப்பானி நிகழ்வை தொகுத்து வழங்கினார்
கூட்டத்தில் பேரவையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு,
லஜ்னத்துல் இஸ்லாஹ் மாணவர் மன்றத்தின் நாற்பதாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது.
ஷரீஅத்தும்,தக்லீதும் நூலை மறு பதிப்பு செய்து வெளியீடு செய்வது.
நீண்ட காலம் ஒரே இடத்தில் பணி செய்யும் ரப்பானி ஆலிம்களை கண்ணியப் படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக திருக்குர்ஆன் மஜ்லிஸும், தொடர்ந்து ஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹழ்ரத்,சம்சுல் மில்லத் அல்லாமா முஹம்மது ஜகரியா ஹழ்ரத், மௌலானா ஃபைஜுர் ரஹ்மான் மதனி ஹழ்ரத்,மௌலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் ஹழ்ரத்,ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத், ஹாஜி ஏ.உபைதுர் ரஹ்மான் மற்றும் மூத்த உலமாக்களின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று ஸியாரத் ஜியாரத் செய்தனர்.
ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபிக் கல்லூரியின் முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காஜியுமான மௌலவி ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் உள்ளிட்ட ஜாமிஆவின் பேராசிரியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ரப்பானி உலமாக்களை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.எஃப்.சாதிக் பாட்ஷா,முன்னாள் முத்தவல்லி ஏ.ஆர்.நவ்வர் உசேன் ஆகியோர் வரவேற்றனர். இறுதியாக பேரவையின் செயற்குழு உறுப்பினர் வாசுதேவநல்லூர் SKS ஷெரீப் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை