JH நர்சரி பிரைமரி பள்ளியின் 75 வது குடியரசு தின கொண்டாட்டம்...!
நிர்வாகி
0
இன்று 26-1-2024 வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் நமது JH நர்சரி & பிரைமரி பள்ளியில் இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.
JH பள்ளியின் தாளாளர் மவ்லவி A. இனாயத்துல்லாஹ் ரஃபீகீ ஹள்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்
JH அறக்கட்டளையின் துணை செயலாளர் S.H. அப்துஸ்ஸமது முன்னிலை வகித்தார்.
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா, மவ்லவி
A.R. ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்.
ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர் மவ்லானா, மவ்லவி ஹாபிழ் மஃசுமுல்லாஹ் மன்பயீ ஹள்ரத் அவர்கள் குடியரசு தின சிறப்புரை ஆற்றினார்
இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை