லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளிடம் தொல்.திருமாவளவன் நேரில் ஆதரவு கேட்டு உரையாற்றினார்..
லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி தாருல் தஃப்ஸீர் கலை கூடத்தில் சிதரம்பரம் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு உரையாற்றினார்.
லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஏ.எம்.எஃப். முஹம்மது சாதிக் தொல்.திருமாவளன் MP அவர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார். செயலாளர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் விசிக பொதுச் செயலாளர் திரு. சிந்தனை செல்வன் MLA அவர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தார்.
ஜாமிஆவின் பொருளாளர் ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ், துணைத் தலைவர் ஜெ.அன்வர் சதாத் மற்றும் ஜாமிஆவின் நிர்வாக சபை உறுப்பினர்கள், அனைத்து மஸ்ஜித் முத்தவல்லிகள் உள்ளிட்ட பலர் திரளாக பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை