Breaking News

மர்ஹபாவின் எழுச்சிமிகு இஃப்தார் ஒன்று கூடல் விழா நிகழ்ச்சி!

நிர்வாகி
0

 *மர்ஹபாவின் எழுச்சிமிகு இஃப்தார் ஒன்று கூடல் விழா நிகழ்ச்சி!*


இறையருள் முன் நிற்க!


அன்புடையீர் அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்)!


மனித சமூகத்திற்கு பொது மறையை கொடுத்து, இப் பேருலகை அடக்கி ஆளும் வல்லமை பொருந்திய ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்!


வல்ல இறைவனின் கருணை கொண்டு மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பில் இஃப்தார் ஒன்று கூடல் விழா 02.04.2024 - செவ்வாய் மாலை 05:30 மணி முதல் இரவு 08:00 மணி வரை அபுதாபி ஜப்பார் பாய் பிரியாணி ரெஸ்டாரண்ட்டில் மிக்க எழுச்சியோடும், மன நிறைவோடும் நடத்தப்பட்டு, நிறைவேறியது (அல்ஹம்துலில்லாஹ்)!.


இஃப்தார் நிகழ்ச்சியினை மர்ஹபாவின் ஒருங்கிணைப்பாளர் M. ஷூஐப் அவர்கள் தலைமை தாங்கி, மிக நேர்த்தியாக தொகுத்து வழங்க, வரவேற்புரை மற்றும் மர்ஹபாவின் கொள்கை - கோட்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் S.A. ரபி அஹமது மிக தெளிவாக எடுத்துரைக்க, துவக்க உரையினை அபுதாபி ஜமாஅத்துல் உலமாவின் தலைவர் மெளலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் S.M.B. ஹூஸைன் மக்கி ஆலிம் மஹ்லரி அவர்கள் பொதுச்சேவையை செய்ய வேண்டிதின் கட்டாயம் பற்றியும், சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசியர் மெளலவி அல்ஹாஜ் M. அபுதாஹிர் பாகவி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொதுச்சேவை மற்றும் அதன் பலன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள். அவர்களுக்கு மர்ஹபா நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.


வாழ்த்துரை வழங்கிய பாரதி நட்புக்காக தலைவர் டாக்டர் சிவராமன், தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு சிவக் குமார், அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் ஜனாப் அலாவுதீன், துபாய் தமுமுகவின் நிர்வாகி S.A. யாசிர் அரஃபாத் அவர்களுக்கு மர்ஹபா நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.


அழைப்பினை ஏற்று வருகை தந்திருந்த Sun Rent A Car குழமத்தின் நிறுவனர் ஹாஜி S.M. முஹம்மது அன்வர், G42வின் IT Manager - ஜனாப் அப்துல் ஜலீல், ஜப்பார் பாய் பிரியாணி நிறுவனர் ஜப்பார் பாய், மனித நேய ஜனநாயக கட்சியின் அபுதாபி மண்டல செயலாளர் ரைசுல் இஸ்லாம், அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகி அபுல் ஹஸன், அட்லஸ் நிறுவன பொறியாளர் திரு சீனிவாசன், சுயநலமில்லா போட்டோகிராபர் ஜனாப் சுப்ஹான், அய்மான் சங்க துணைத்தலைவர் ஆவை A.S. முஹம்மது அன்சாரி, காயிதே மில்லத் பேரவை சார்பில் மீரான் பைஜி ஆகியோருக்கு மர்ஹபா நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.


இந்த எழுச்சி மிகு நிகழ்வில் பெண்களும், பல்வேறு ஊர் ஜமா’அத் அமைப்புகளும் (லால்பேட்டை, அய்யம்பேட்டை, பரங்கிப்பேட்டை, சென்னை, மதுரை, அடியக்க மங்கலம், ரெட்டியூர் இன்னும் பல…), மஜக (அபுதாபி/அல் அய்ன்/துபாய்), தமுமுக (அபுதாபி / துபாய்), சமூக ஆர்வலர்கள், பொது சிந்தனையாளர்கள என திரளாக மனித நேய சொந்தங்கள் வருகை புரிந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மர்ஹபா நிர்வாகிகளும், நோன்பு திறப்பதறகான உணவு வகைகள், தேனீர், இரவு உணவு என அனைத்தையும் ஜப்பார் பாய் பிரியாணி ரெஸ்டாரண்ட் நிர்வாகிகள் ஜனாப் பைரோஸ் அல் மஹதி & ஜனாப் அப்துல் காதர் அவர்களும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தனர்.


நன்றி உறையினை மர்ஹபாவின் ஒருங்கிணைப்பாளர் N. முஹம்து சித்தீக் வழங்க, M. அபுதாஹிர் ஹஜ்ரத் பெருந்தகையின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது (அல்ஹம்துலில்லாஹ்)!


வல்ல ரஹ்மான் மர்ஹபாவின் பரந்த நோக்கத்தையும், விசாலாமான மனதையும் பொருந்திக்கொண்டு, அதன் செயலாக்கத்தை வீரியமுடனும், நிதானத்துடனும் செயலாற்ற துணை புரிவானாக! ஆமீன்.


என்றும் சேவைப்பணியில் களமாடும் முயற்ச்சியில்…

மர்ஹபா சமூக நலப் பேரவை
Tags: உலக செய்திகள்

Share this