லால்பேட்டை நகருக்கு வருகை தந்த msf மாநில பொதுச்செயலாளருக்கு முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வரவேற்பு!
சமுதாய பிரமுகர் எம்.எம். உஜைர் அஹ்மத் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க லால்பேட்டை நகருக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர். நூர் முஹம்மது அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தில் இன்று ( 02/05/2024 வியாழக்கிழமை) இரவு 9 - 00 மணியளவில் நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜிது தலைமையில் நடைபெற்றது.
நகரச் செயலாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி வரவேற்றுப் பேசினார். மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுகவுரையாற்றினார். வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர். நூர் முஹம்மது அவர்களுக்கு லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் சார்பிலும், நகர எம்.எஸ்.எஃப் சார்பிலும் சால்வை அணிவித்து, அவரின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், தலைமை நிலைய பேச்சாளர் யூ. சல்மான் பாரிஸ், நகர துணைத் தலைவர்கள் எம். முஹம்மது சித்தீக், மவ்லவி ஏ. அமீனுல் ஹுசைன், கௌரவ ஆலோசகர் மவ்லவி ஏ. முஹம்மது, நகரப் பிரதிநிதி எம்.ஹெச். முஹம்மது நாசர், மாணவரணி நகரத் தலைவர் முஸாஹிர், செயலாளர் தஸ்லீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடலூர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் ஆஷிக் வேலை நிமித்தமாக சவூதி அரேபியா பயணம் மேற்கொள்ள இருப்பதால், அவரின் பணி சிறக்க வாழ்த்தி சால்வை அணிவிக்கப்பட்டது.
நகர முஸ்லிம் லீக் பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லாஹ் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை