Breaking News

லால்பேட்டைக்கு மருத்துவமனை வேண்டும்..! அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுடன் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி சந்திப்பு..!

நிர்வாகி
0

 


ஆகஸ்ட் 24., லால்பேட்டை பேரூராட்சிக்கு அரசு மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பபட்டு வருகிறது. சமீபத்தில் லால்பேட்டைக்கு வருகை புரிந்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களிடம் மஜக மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன்MC, அவை தலைவர் தையூப் மற்றும் ஊர் பிரமுகர்களும் கோரிக்கை வைத்தனர்.


இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை சந்தித்த மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் லால்பேட்டை பேரூராட்சி என்பதால் அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டு கொண்டார். அது தொடர்பான விரிவான மனுவையும் கையளித்தார்.


இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.


இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மனிதநேய வழக்கறிஞர் பேரவை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் லால்பேட்டை முஸரப், கடலூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






Tags: லால்பேட்டை

Share this