லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் 10 11 2024 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.
நகர செயலாளர் முஹம்மது தையிப் முஹிப்பி வரவேற்புரை ஆற்றினார்.
மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி நோக்க உரையாற்றினார்.
புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும் நகர முஸ்லிம் லீக் கெளரவ ஆலோசகர் மௌலவி ஏ.ஏ.முஹம்மது மன்பஈ அவர்களுக்கு சால்வை அணிவித்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.
சவூதி அரேபியா பயணம் மேற்கொள்ளும் நகர மாணவரணி செயல் வீரர் நஸ்ருல்லாஹ்வுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற இருக்கும் முப்பெரும் விழாவை ஜனவரி 5-ம் ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று மாவட்டம் தழுவிய அளவில் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது எனவும், கூட்டணி கட்சி தலைவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களை அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
நகர பொருளாளர் எம்.ஹெச்.முஹிப்புல்லாஹ் நன்றி கூற நகர துணைத் தலைவர் மௌலவி முஹம்மது அய்யூப் மன்பஈ துஆ ஓதினார்.
Tags: லால்பேட்டை