20ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம்
நிர்வாகி
0
அ.இ.அ.தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம் வரும் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் ஓட்டலில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மாலை 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார் என்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.